Apple சாம்ராஜ்யமே மிரளுது.. PROLED XDR டச் டிஸ்பிளே.. 12MP கேமரா.. புது MacBook Pro அறிமுகம்!
ஆப்பிள் நிறுவனத்தின் புது ஜெனரேஷன் ஆப்பிள் மேக்புக் ப்ரோ (Apple MacBook Pro) லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 14 இன்ச் மற்றும் 16 இன்ச் சைஸ்களில் வந்துள்ள இந்த புதிய லேப்டாப்கள், லேட்டஸ்ட் ப்ரோஎல்இடி எக்ஸ்டிஆர் (PROLED XDR) டச் டிஸ்பிளே மற்றும் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் சிப்செட்டுடன் கிடைக்க இருக்கிறது.
இந்த புதிய லேப்டாப்களின் முக்கிய சிறப்பம்சமே இதில் வழங்கப்பட்டுள்ள டேண்டம் ஓஎல்இடி (Tandem OLED) பேனல் கொண்ட டிஸ்பிளேதான். இது 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1000 நிட்ஸ் சஸ்டெய்ன்டு பிரைட்னஸ் மற்றும் ப்ரோமோஷன் (ProMotion) டெக்னாலஜி மூலம் 10Hz முதல் 120Hz வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட்டை வழங்குகிறது.

மேலும், இந்த டிஸ்பிளே 10,000,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் அடோப் ஆர்ஜிபி (Adobe RGB) கலர் சப்போர்ட்டை கொண்டுள்ளது. அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் ரிஃப்ளெக்ஷனைக் குறைக்க நானோ-டெக்ஸ்சர் கிளாஸ் (Nano-texture Glass) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பெற கூடுதலாக ரூ.18,000 செலுத்த வேண்டியிருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேக் லேப்டாப் வரலாற்றில் முதல்முறையாக, இந்த மாடல்களில் டச் ஸ்கிரீன் (Touch Screen) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, பிஞ்ச்-டூ-ஜூம், பேனிங் மற்றும் விண்டோ டைலிங் போன்ற மல்டி-டச் ஜெஸ்சர்களை (Multi-touch Gestures) எளிதாக பயன்படுத்த முடியும். மேக்ஓஎஸ் (macOS) சாஃப்ட்வேர் இந்த டச் இன்புட்களை ஆட்டோமேட்டிக்காக மவுஸ் கிளிக்குகளாக மாற்றிக்கொள்கிறது.
டிசைனைப் பொறுத்தவரை, முந்தைய மாடல்களை விட இவை மிகவும் ஸ்லிம்மாகவும் எடை குறைவாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. பழைய கேமரா நாட்ச் நீக்கப்பட்டு, ஐபோன்களில் உள்ளதை போன்ற டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 12MP சென்டர் ஸ்டேஜ் கேமரா (Center Stage Camera), லைவ் ஆக்டிவிட்டீஸ், மீடியா கன்ட்ரோல் இடம்பெற்றுள்ளன.
மிரட்டலான பர்ஃபாமென்ஸ் வழங்குவதற்காக இந்த லேப்டாப்களில் ஆப்பிள் எம்5 ப்ரோ (Apple M5 Pro) மற்றும் ஆப்பிள் எம்5 மேக்ஸ் (Apple M5 Max) சிப்செட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மேம்படுத்தப்பட்ட சிபியு ஆர்க்கிடெக்சர், 16-கோர் நியூரல் இன்ஜின் (Neural Engine) மற்றும் 3ஆவது ஜெனரேஷன் ஹார்டுவேர்-அக்சலரேட்டட் ரே டிரேசிங் (Ray Tracing) கொண்டதாக உள்ளது.
ஆகவே, ஜிபியு அதிவேகமாக செயல்படும் வகையில் வருகின்றன. இதில் எம்5 ப்ரோ சிப்செட் 15-கோர் அல்லது 18-கோர் சிபியு மற்றும் 20-கோர் வரையிலான ஜிபியு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எம்5 மேக்ஸ் சிப்செட் 18-கோர் சிபியு மற்றும் 32-கோர் அல்லது 40-கோர் ஜிபியு உடன் வருகிறது. மேலும், அதிகபட்சமாக 128GB யூனிஃபைடு மெமரி (Unified Memory), 16TB எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வருகிறது.
கனெக்டிவிட்டி வசதிகளை பொறுத்தவரை, மூன்று தண்டர்போல்ட் 5 (Thunderbolt 5) போர்ட்கள், ஹெச்டிஎம்ஐ 2.1 (HDMI 2.1) போர்ட், எஸ்டிஎக்ஸ்சி கார்டு ஸ்லாட், மேக்சேஃப் 3 (MagSafe 3) சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளன. வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்காக ஆப்பிள் என்1 (Apple N1) சிப் மூலம் வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 6.0 வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை, ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மூலம் வெறும் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடலாம். ஆடியோவிற்கு டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டுடியோ-கிரேடு மைக்ரோஃபோன்கள் உள்ளன.
இந்திய விலையைப் பொறுத்தவரை, 14 இன்ச் எம்5 ப்ரோ 24GB மெமரி மற்றும் 1TB ஸ்டோரேஜ் மாடல் ரூ.3,49,900 விலையிலும், 2TB ஸ்டோரேஜ் மாடல் ரூ.3,87,900 விலையிலும் அறிமுகமாகியுள்ளது. அதேபோல, 14 இன்ச் எம்5 மேக்ஸ் 36GB மெமரி மாடல் ரூ.5,49,900 விலையிலும், 48GB மெமரி மற்றும் 2TB ஸ்டோரேஜ் மாடல் ரூ.6,21,900 விலையிலும் விற்பனைக்கு வருகிறது.
மறுபுறம், 16 இன்ச் எம்5 ப்ரோ 24GB மெமரி மாடல் ரூ.4,09,900 விலையிலும், 16 இன்ச் எம்5 மேக்ஸ் 36GB மாடல் ரூ.5,89,900 மற்றும் 48GB மாடல் ரூ.6,69,900 விலையிலும் வெளியாகியுள்ளன. இந்த புதிய லேப்டாப்களுக்கான ப்ரீ-ஆர்டர் (Pre-order) அக்டோபர் 28 முதல் தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 6 முதல் நேரடி விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
