Home
Gadgets

இதுக்கு மேல குறையாதுப்பா.. Apple MacBook Air M2 மீது அடேங்கப்பா ஆபர்.. Amazon-ல் விட்றாதீங்க!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது எம்2 சிப் உடன் வரும் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் (Apple MacBook Air M2) மாடலை அபாரமான தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. என்ன ஆபர்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

உங்களிடம் எஸ்பிஐ (SBI) அல்லது ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால், அமேசான் இந்தியா வழியாக ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 மாடலை ரூ.69,990 க்கு வாங்க முடியும். குறிப்பிட்ட பேங்க் கார்டுகளை கொண்டுள்ள பயனர்ககளுக்கு ரூ.8,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

Apple MacBook Air M2 மீது அடேங்கப்பா ஆபர்.. Amazon-ல் விட்றாதீங்க!

இருப்பினும் அமேசான் பே ஐசிஐசிஐ (Amazon Pay ICICI) கிரெடிட் கார்டுக்கு இந்த சலுகை பொருந்தாது. நினைவூட்டும் வண்ணம் ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 மாடலின் அசல் விற்பனை விலை ரூ.77,990 ஆகும்.அமேசானில் கிடைக்கும் ரூ.8,000 உடனடி தள்ளுபடியுடன், நீங்கள் இதை ரூ.69,990 க்கு வாங்க முடியும்; இதுவொரு குறிப்பிட்ட கால சலுகை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 மாடலின் முக்கிய அம்சங்கள்: பெயர் குறிப்பிடுவது போலவே எம்2 சிப்பை கொண்டுள்ளது, இதில் 8-கோர் சிபியு (4 செயல்திறன், 4 செயல்திறன்) மற்றும் 8-கோர் ஜிபியு (10-கோருக்கு உள்ளமைக்கக்கூடியது), அத்துடன் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை கள் உள்ளன.

8ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த மேக்புக் மாடல் 256ஜிபி முதல் 2டிபி வரை எஸ்எஸ்டி ஸ்டோரேஜை வழங்குகிறது. டிஸ்பிளேவை பொருத்தவ்ரு 2560×1664 ரெசல்யூஷன், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 13.6-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்பிளேவை கொண்டுள்ளது

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது இரண்டு தண்டர்போல்ட் / யூஎஸ்பி 4 போர்ட்கள் மற்றும் ஒரு மேக்சேப் 3 சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதுதவிர 1080p பேஸ்டைம் எச்டி கேமரா, ஸ்பேஷியல் ஆடியோவுடன் குவாட்-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டச் ஐடியுடன் கூடிய பேக்லிட் மேஜிக் கீபோர்டு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் ஆப்பிளின் லேட்டஸ்ட் மேக்புக் ஏர் மாடலை வாங்க விரும்பினால் எம்4 சிப் உடன் அறிமுகமான 2025 மாடல்களை கருத்தில் கொள்ளலாம். 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 13-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.99,900 க்கும், 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 மாடல் ரூ.1,24,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 13-இன்ச் (2,560×1,664 பிக்சல்ஸ்) மற்றும் 15-இன்ச் (2,880×1,864 பிக்சல்ஸ்) சூப்பர் ரெடினா டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேக்கள் 224பிபி பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டது. இந்த ஆப்பிள் லேப்டாப்கள் 6கே ரெசல்யூஷனில் 2 எக்ஸ்டர்னல் டிஸ்பிளேக்களை ஆதரிக்கும் (லேப்டாப் திறந்திருக்கும் போது) என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர் 2025 ஆனது எம்4 சிப் உடன் வருகிறது. இதில் நான்கு பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் நான்கு எஃபீஷியன்சி கோர்கள் கொண்ட 10-கோர் சிபியு உள்ளது. இந்த லேப்டாப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின், 8-கோர் ஜிபியு மற்றும் ஹார்டுவேர் ஆக்சிலரேட்டட் ரே டிரேசிங்கிற்கான ஆதரவும் உள்ளது.

மேக்புக் ஏர் 2025 மாடலை 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் கட்டமைக்க முடியும. மேலும் இது ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் த்ரீ-மைக் செரீஸ் உடன் கூடிய குவாட் ஸ்பீக்கர் செட்டப்பையும் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது Wi-Fi 6E மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் இது இரண்டு தண்டர்போல்ட் 4/ யூஎஸ்பி 4 போர்ட்கள், ஒரு மேக்சேப் 3 சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் இந்த புதிய மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது டச் ஐடி பட்டனையும் கொண்டுள்ளது, இது லேப்டாப்பை அன்லாக் செய்ய பயன்படுகிறது.

இது ஃபோர்ஸ் க்ளிக்குகள் மற்றும் மல்டி-டச் சைகைகளுக்கான ஆதரவுடன் ஃபோர்ஸ் டச் டிராக்பேடையும் கொண்டுள்ளது. சென்டர் ஸ்டேஜ் மற்றும் டெஸ்க் வியூவுக்கான ஆதரவுடன் 1080p ஃபேஸ்டைம் கேமராவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 13-இன்ச் மேக்புக் ஏர் 2025 மாடல் ஆனது 53.8Wh லித்தியம்-பாலிமர் பேட்டரியை 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது.

ஆனால் இது 30W யூஎஸ்பி டைப்-சி பவர் அடாப்டருடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள 15-இன்ச் மாடல் சற்று பெரிய 66.5Wh பேட்டரியை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி இது 15 மணிநேர இண்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும் ஆப்பிள் டிவி ஆப் மூலம் 18 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple MacBook Air M2 Gets Rs 8000 Bank Discount Selling At Offer Price Rs 69990 in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X