புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் 2018.! விலை என்ன தெரியுமா?

ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் மேக்புக் ஏர் 2018 மாடலை, ப்ரூக்ளின் இல் நடைபெற்ற ஆப்பிள் நிகழ்ச்சியில் நேற்று ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

|

ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் மேக்புக் ஏர் 2018 மாடலை, ப்ரூக்ளின் இல் நடைபெற்ற ஆப்பிள் நிகழ்ச்சியில் நேற்று ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் புத்தம் புதிய ரெட்டினா டிஸ்பிளே மற்றும் டச் ஐ.டி யுடன் கூடிய பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் மேக்புக் ஏர்

ஆப்பிள் மேக்புக் ஏர்

ஆப்பிள் மேக்புக் ஏர் 13.3' இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் கொண்ட ஸ்லீக் ரெட்டினா டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மேக்புக் ஏர் மாடலை விட 50% ஒடுக்கமான தோற்றத்தில் 4 மில்லியன் பிக்சல் உடன் இந்த புதிய மேக்புக் ஏர் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ஏர் இரண்டு யு.எஸ்.பி-சி பொருட்களுடன் 3.5mm ஹெட்போன் ஜாக் உடன் வெளியாகியுள்ளது.

டி2 சிப் &  டச் ஐ.டி சேவை

டி2 சிப் & டச் ஐ.டி சேவை

புதிய அங்கீகார சேவைக்காக டி2 சிப் மூலம் இயக்கப்படும் டச் ஐ.டி சேவை இந்த புதிய மேக்புக் ஏர் இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மேக்புக் ஏர் இல் பிரத்தியேக 3 ஆம் ஜெனெரேஷன் பட்டர்ஃபிளை கீபோர்டு மெக்கானிசம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மேக்புக் ஏர் சிறப்பம்:

புதிய மேக்புக் ஏர் சிறப்பம்:

- 13.3' இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே

- ஆப்பிள் டி2 சிப்செட்
- 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர்கள்
- 16 ஜி.பி. ரேம்
- 1.5 டி.பி. எஸ்.எஸ்.டி. சேமிப்பு
- பேக்லிட் கீபோர்டு
- ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
- சிரி வாய்ஸ் கமான்ட்
- டச் ஐ.டி. கைரேகை சென்சார்
- இரண்டு தன்டர்போல்ட் 3.0 போர்ட்
- ஒருநாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி
- 1.5 கிலோ எடை

விலை :

விலை :

புதிய மேக்புக் ஏர் 2018, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்.எஸ்.டி கொண்ட 1.6GHz கோர் i5 துவக்க மாடல் ரூ.88,200 என்ற விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple MacBook Air 2018 announced with Retina display and Touch ID : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X