Home
Gadgets

இன்பதிர்ச்சி கொடுத்த ஆப்பிள்.. வரப்போகுது டூயல் செல்பீ கேமரா.. எம்5 ஐபாட் ப்ரோவில் வருது மிகப்பெரும் சேஞ்ச்!

ஒட்டுமொத்த ஐபாட் பிரியர்களும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த செல்பீ கேமரா அப்கிரேட்டானது, ஆப்பிள் எம்5 ஐபாட் ப்ரோ (Apple M5 iPad Pro) மாடலில் கிடைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ராய்டு என்று 2 ஆங்கிள்களுக்கும் ஏற்ப டூயல் செல்பீ கேமராக்கள் வர இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் நிறுவனமானது அதன் அடுத்த ஜெனரேஷன் எம்5 சிப்செட் கொண்ட ஐபாட் ப்ரோ டேப்லெட்டில் 2 ப்ரன்ட் கேமராக்களை (Front Cameras) கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க்கின் (Bloomberg) மார்க் குர்மன் (Mark Gurman) தெரிவித்துள்ளார். 2ஆவது ப்ரன்ட் கேமரா மூலம் போர்ட்ராய்டு அவுட்புட்களை பெற்று கொள்ள முடியும் என்றும் சொல்கிறார்.

இன்பதிர்ச்சி கொடுத்த ஆப்பிள்.. வரப்போகுது டூயல் செல்பீ கேமரா!

எதற்கு 2 ப்ரன்ட் கேமராக்கள்?
ஐபாட் ப்ரோ மாடல்களில் இருக்கும் செல்பீ கேமராவானது, லேண்ட்ஸ்கேப் அவுட்புட்டுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த கேமரா மூலம் போர்ட்ராய்டு ஆங்கிளில் போட்டோக்கள் எடுப்பது அல்லது வீடியோ கால்கள் செய்வது பொருத்தம் இல்லாதது போல இருக்கிறது. இதனாலேயே, செல்பீ கேமராவில் அப்கிரேட் தேவை என்று ஆப்பிள் பிரியர்கள் விரும்பினர்.

இவர்களுக்கு டபுள் ட்ரீட்டாக டூயல் செல்பீ கேமராவையே கொடுக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக மார்க் குர்மன் தெரிவித்து, பிரியர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் அப்டேட்களை பிரத்யேகமாக கொடுக்கும் மார்க் குர்மன் இதை உறுதி செய்துள்ளதால், அடுத்த ஜெனரேஷன் ஐபாட் ப்ரோவில் 2 செல்பீ இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகும்.

இந்த 2 செல்பீ கேமராக்கள் மூலம் போர்ட்ராய்டு மற்றும் லேண்ட்ஸ்கேப் அவுட்புட்களை பெற்று கொள்ளலாம். சொல்லப்போனால், பழைய ஐபாட் மாடல்களில் இருந்த போர்ட்ராய்டு செல்பீ கேமராவே, எம்4 மாடலில் லேண்ட்ஸ்கேப் கேமராவாக அப்கிரேட் செய்யப்பட்டது. இப்போது, பொதுவாக 2 கேமராவாக அப்கிரேட் செய்யப்பட இருக்கிறது.

இந்த ஆப்பிள் எம்5 ஐபாட் ப்ரோ மாடலில் பேஸ் ஐடி (Face ID) செக்யூரிட்டி பீச்சரானது, 2 கேமராக்களிலும் வேலை செய்யும். அதில் எந்த குழப்பமும் இருக்காது. அதே நேரத்தில் செல்பீ எடுக்கும் போதும், வீடியோ கால்களை செய்யும்போதும், 2 ஆங்கிள்களில் இருந்தும் அவற்றை செய்து கொள்ளலாம். இந்த ஆப்பிள் எம்5 ஐபாட் ப்ரோ மாடலை எப்போது எதிர்பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் எம்5 ஐபாட் ப்ரோ வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். உண்மையில் ஐபாட் மாடல்கள் 18 மாதங்களுக்கு ஒரு முறை அப்கிரேட் செய்யப்படும். எம்4 சிப்செட் கொண்ட ஐபாட் ப்ரோ மாடலானது 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகியது.

ஆகவே, அந்த 18 மாத கணக்கின்படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதையே மார்கெட் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்த முறை எம்5 சிப்செட் ஐஓஎஸ் அப்கிரேட்கள் மட்டும்மல்லாமல், ஹார்ட்வேர் லெவலில் கேமராவிலும் அப்கிரேட் கிடைக்க இருப்பது தெரிகிறது.

மேலும், ஆப்பிள் யூசர்களுக்கான ஐஓஎஸ் 16 (iOS 26) பப்ளிக் பீட்டா (Public Beta) இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதியாக சேர்க்கப்பட்ட லிக்விட் கிளாஸ் இன்டர்பேஸ் (Liquid Glass Interface) மற்றும் அப்கிரேடட் ஆப்பிள் இன்டலிஜன்ட்ஸ் (Apple Intelligence) போன்ற பல்வேறு பீச்சர்கள் அதில் கிடைக்க இருக்கின்றன. இதனால், ஐபோன் யூசர்கள் படுகுஷியில் இருக்கின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple M5 iPad Pro Rumored to Integrate Dual Front Facing Camera For Both Landscape and Portrait
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X