ஒஎல்இடி ஐபேட் மினி அறிமுகம்.. 12எம்பி கேமரா.. IP67 ரேட்டிங்.. ஏ20 ப்ரோ சிப்.. என்ன விலை? எப்போது விற்பனை?
ஆப்பிள் நிறுவனம் புதிய ஒஎல்இடி ஐபேட் மினி மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு, ஐபி67 ரேட்டிங், சக்திவாய்ந்த சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஐபேட் வெளியாகி உள்ளது. இப்போது இந்த மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒஎல்இடி ஐபேட் மினி அம்சங்கள்: 8.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே உடன் ஒஎல்இடி ஐபேட் மினி மாடல். மேலும் இதன் டிஸ்பிளேவில் பி3 கலர் காமட் (P3 Color Gamut), 600 நிட்ஸ் பிரைட்னஸ், ட்ரூ டோன் டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஏ20 ப்ரோ 3என்எம் சிப் (A20 Pro 3nm chip), 5-கோர் GPU, 16-கோர் நியூரல் இன்ஜின் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஒஎல்இடி ஐபேட் மினி மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஐபேட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட ஐபோன் 18 சீரஸ் மாடல்களிலும் இதே சிப் வசதி தான் இருந்தது.
128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ஐபேட் மாடல் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
12எம்பி கேமரா உடன் ஒஎல்இடி ஐபேட் மினி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியர் கேமரா மூலம் 4K வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இந்த மாடலில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
இந்த சாதனத்தின் தடிமன் வெறும் 5.4 மி.மீ. மட்டுமே. Wi-Fi மாடலின் எடை சுமார் 255 கிராம், செல்லுலார் மாடலின் எடை 263 கிராம் ஆகும். மேலும், IP67 தரச் சான்று வழங்கப்பட்டுள்ளதால், தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இதன் மூலம் மினி மாடலில் நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள Acoustic Display தொழில்நுட்பம் மூலம், திரையின் வழியாகவே ஒலி வெளிப்படுகிறது. இதனால் தனியாக ஸ்பீக்கர் துளைகள் தேவையில்லை. கைரேகை மூலம் சாதனத்தைத் திறக்கும் Touch ID வசதி, மேல் பகுதியில் உள்ள பட்டனில் இடம்பெற்றுள்ளது.
5ஜி, ஜிபிஎஸ், வைஃபை 7, ப்ளூடூத் 6 ஆகிய கனெக்டிவிட்டி வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.Apple Pencil Pro-வையும் இந்த சாதனம் ஆதரிக்கிறது. மேலும், Siri AI வசதிகளுடன் கூடிய iPadOS 27 இயங்குதளத்தில் இது செயல்படுகிறது. செல்லுலார் மாடல்களில் Apple நிறுவனத்தின் C2 5G மோடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் eSIM வசதி மட்டுமே உள்ளது. வழக்கமான சிம் கார்டைப் பயன்படுத்த முடியாது.
இந்த சாதனத்தில் 19.3 வாட் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், வைஃபை இணைப்பைப் பயன்படுத்தி இணையம் பயன்படுத்துதல், வீடியோக்களைப் பார்ப்பது அல்லது இசையைக் கேட்பது போன்றவற்றுக்கு அதிகபட்சம் 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

ஒஎல்இடி ஐபேட் மினி விலை
128ஜிபி மெமரி (வைஃபை) கொண்ட ஒஎல்இடி ஐபேட் மினி மாடலின் விலை ரூ.82,900-ஆக உள்ளது.
256ஜிபி மெமரி (வைஃபை) கொண்ட ஒஎல்இடி ஐபேட் மினி மாடலின் விலை ரூ.94,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி (வைஃபை) கொண்ட ஒஎல்இடி ஐபேட் மினி மாடலின் விலை ரூ.1,18,900-ஆக உள்ளது.
128ஜிபி மெமரி (வைஃபை + செல்லுலார் ) கொண்ட ஒஎல்இடி ஐபேட் மினி மாடலின் விலை ரூ.100,900-ஆக உள்ளது.
256ஜிபி மெமரி (வைஃபை +செல்லுலார் ) கொண்ட ஒஎல்இடி ஐபேட் மினி மாடலின் விலை ரூ.1,12,900-ஆக உள்ளது.
512ஜிபி மெமரி (வைஃபை + செல்லுலார் ) கொண்ட ஒஎல்இடி ஐபேட் மினி மாடலின் விலை ரூ.1,36,900-ஆக உள்ளது.
36 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், அக்டோபர் 28, புதன்கிழமை அன்று ஒஎல்இடி ஐபேட் மினி மாடலின் முன்பதிவுகள் தொடங்குகின்றன. வரும் நவம்பர் 6-ம் தேதி இந்த மாடல் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications
