தரமான கேமரா வசதியுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல்கள் அறிமுகம்.!
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஐபேட் மாடல்கள் ஏ1இசட் பயோனிக் பிராசஸர், அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா,5ஸ்டூடியோ தர மைக்குகள், LiDAR ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு
அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஐபேட் ஒ.எஸ் 13.4
குறிப்பாக இந்த சாதனங்களில் ஐபேட் ஒ.எஸ் 13.4பதிப்பில் டிராக்பேட் பயன்படுத்துவதற்கான வசதியை ஆப்பிள் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

தற்போது ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12.9-இன்ச் என இரண்டு மாறுபாடுகளில் வெளிவந்துள்ளது, அதன்படி 11 இன்ச்மாடல் ஆனது 2388x1668 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வடிவமைப்பையும், பின்பு 12.9 இன்ச் மாடல் ஆனது 2732x2048 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே வடிவமைப்பையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

இந்த புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் ஆக்டா கோர் ஏ12இசட் பயோனிக் பிராசஸர் மற்றும் 8 கோர் ஜி.பி.யு. மற்றும் எம்12 மோஷன் பிராசஸர் வசதியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனங்களில் 128 ஜி.பி./ 256 ஜி.பி. / 512 ஜி.பி./ 1000 ஜி.பி. மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஐபேட் ஒஸ் 13.4 வசதியைக் கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஆப்பிள் ஐபேட் ப்ரோ சாதனங்களில் 12எம்பி கேமரா, 10எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, குவாட் எல்.இ.டி. ட்ரூ டோன் ஃபிளாஷ் மற்றும் 7எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

புதிய ஆப்பிள் ஐபேட் ப்ரோ சாதனங்களில் போர்டிரெயிட் லைட்டிங், ரெட்டினா ஃபிளாஷ், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர்., ஐந்து மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இப்போது வெளிவந்த ஐபேட் ப்ரோ 11-இன்ச் மாடலில் 28.65 வாட் பேட்டரி வசதியும், பின்பு 12.9 இன்ச் மாடலில் 36.71 வாட் பேட்டரி வசதியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11-இன்ச் ஐபேட் ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.71,900-ஆக உள்ளது. அதன்பின்பு 12-இன் ஐபேட் மாடலின் ஆரம்பவிலை ரூ.89,900-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications