Home
Gadgets

Apple அசத்தல்.. வாவ் சொல்ல வைக்கும் விலையில் AirPods 4 அறிமுகம்.. புதிய கலர்களில் AirPods Max அறிமுகம்!

Apple AirPods 4 Price Specifications: ஆப்பிள் நிறுவனம் அதன் இட்ஸ் க்ளோடைம் வெளியீட்டு நிகழ்வில் (Its Glowtime Launch Event) புதிய ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) உடன் சேர்த்து புதிய ஆடியோ தயாரிப்பையும் அறிமுகம் செய்துள்ளது. அது - ஆப்பிள் ஏர்போட்ஸ் 4 இயர்பட்ஸ் (Apple AirPods 4) வேரியண்ட்கள் ஆகும். இதோடு ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் (Apple AirPods Max) ஹெட்போன்ஸின் புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஆடியோ டிவைஸ்களும் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? இதோ விவரங்கள்:

ஆப்பிள் ஏர்போட்ஸ் 4 இயர்பட்ஸ் அம்சங்கள் மற்றும் விலை: ஆப்பிளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஏர்போட்களை "மாற்றுவதை" நோக்கமாக கொண்டுள்ளன புதிய ஏர்போட்ஸ் 4 மாடல்கள் ஆனது 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களுமே வசதியான பொருத்தத்திற்காக ரீபிளேஸபிள் இயர் டிப்ஸ்களுடன் (Replaceable ear tips) புதிய வடிவமைப்பை (New Design) பெற்றுள்ளன.

Apple அசத்தல்.. வாவ் சொல்ல வைக்கும் விலையில் AirPods 4 அறிமுகம்!

ஹையர் வேரியண்ட் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல்லேஷன் (Active Noise Cancellation) அம்சத்துடன் வருகிறது. நினைவூட்டும் வண்ணம், இப்போது வரை இந்த அம்சம் ஏர்போட்ஸ் ப்ரோ (AiPods Pro) மாடல்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தது. ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வேரியண்ட்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு இதுதான்.

சுவாரஸ்யமாக இந்த இயர்பட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் (Wireless Charging) ஆதரிக்கிறது. மேலும் ஏர்போட்ஸ் 4-ன் இரண்டு வேரியண்ட்களுமே சார்ஜ் செய்வதற்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் (USB Type-C Port) வருகின்றன. இருப்பினும், ஹையர் வேரியண்ட்டின் சார்ஜிங் கேஸ் (Charging Case) ஆனது ஃபைண்ட் மை இன்டெக்ரேஷனுக்கான பில்ட்-இன் ஸ்பீக்கர்களுடன் (Built-in speakers for Find My integration) வருகிறது.

Apple அசத்தல்.. வாவ் சொல்ல வைக்கும் விலையில் AirPods 4 அறிமுகம்!

ஆப்பிளின் இந்த 2 புதிய இயர்பட்ஸ்களிலுமே எச்2 சிப் (H2 Chip) உள்ளது, இது மேம்பட்ட ஒலி தரத்தை (Improved sound quality) வழங்குகிறது. இது தனிப்பயனாக்கப்பட்ட இடஞ்சார்ந்த ஆடியோ (personalised spatial audio), குரல் தனிமைப்படுத்தல் (voice isolation) மற்றும் சைகை அடிப்படையிலான சிரி கட்டுப்பாடுகளுடன் (Gesture-based Siri controls) வருகிறது.

WWDC நிகழ்வில் அறிவிக்கப்பட்ட சிரி இன்டராக்ஷன் அம்சமும் (Siri Interaction feature) இதில் உள்ளது, இது சிரியின் கேள்விகளுக்கு உங்கள் தலையை அசைப்பதன் மூலம் ஆம் அல்லது இல்லை என்று பதில் அளிக்க முடியும். பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை, ஏர்போட்ஸ் 4 ஆனது 30 மணிநேர பேட்டரியை (30 hours of battery life) வழங்குகிறது. இது "மிகவும் வசதியான ஏர்போட்கள்" என்று ஆப்பிள் கூறுகிறது.

ஆப்பிள் ஏர்போட்ஸ் 4 இயர்பட்ஸின் விலையை பொறுத்தவரை, ஏஎன்சி (ANC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல்லேஷன் அம்சத்துடன் வரும் ஹையர் வேரியண்ட் ஆனது $179 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.15,000 க்கு) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஏஎன்சி இல்லாத ஏர்போட்ஸ் 4 மாடல் ஆனது $129 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.11,000 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களின் முன்பதிவுகளுமே இன்று முதல் தொடங்குகின்றன. இவைகள் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்ஸின் புதிய கலர் ஆப்ஷன்: ஆப்பிள் நிறுவனம் அதன் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்ஸிற்கான புதிய வண்ணங்களையும், யுஎஸ்பி-சி போர்ட்டையும் அறிவித்துள்ளது. இது $529 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஹெட்போன்ஸ் மிட்நைட், ப்ளூ, பர்பிள், ஆரஞ்சு மற்றும் ஸ்டார்லைட் ஆகிய வகைகளில் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Apple Launched AirPods 4 and AirPods Max Gets New Colours Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X