புது iPad Pro டேப்லெட்.. M5 சிப் வந்தாச்சு.. 11 இன்ச், 13 இன்ச் டிஸ்பிளே.. இந்திய விலை மற்றும் விற்பனை எப்படி?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் ப்ரோ (iPad Pro) டேப்லெட்டில் எம்5 சிப்செட் கொண்ட வெர்ஷன் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் டிஸ்பிளே கொண்ட மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. அதேபோல நானோ டெக்ச்சர் டிஸ்பிளே மாடல்களும் இருக்கிறது. இந்த மாடல்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
எம்5 சிப்செட்டில் என்ன இருக்கிறது?
எம்1 சிப்செட்டை விட 6.7X மடங்கு மற்றும் எம்4 சிப்செட்டை விட 1.5X மடங்கு அதிக வேகமாக ரேய் டிரேசிங்குடன் 3டி ரென்டரிங் கொடுக்கிறது. ஐபாட்களுக்கான ஃபைனல் கட் ப்ரோவில் 6X மடங்கு வீடியோ டிரான்ஸ்கோட் வேகம் கொடுக்கிறது. ஏஐ இமேஜ் ஜெனரேஷனில் எம்1 சிப்செட்டை விட 4X மடங்கு வேகம் கொடுக்கிறது.

அதேபோல எம்4 சிப்செட்டை விட 2X மடங்கு வேகம் கொடுக்கும். இப்படி ஏஐ வீடியோ அப்ஸ்கேலிங் (AI Video Upscaling) பர்ஃபாமென்ஸ் உள்ளிட்ட பலவ்றில் முந்தைய வெர்ஷன்களைவிட அதிக வேகம் கொடுக்கிறது. சி1எக்ஸ் (C1X) மோடம் மற்றும் என்1 (N1 Chip) கிடைக்கிறது. ஆகவே, முந்தைய வெர்ஷன்களைவிட கனெக்டிவிட்டிலும் கூடுல் பர்ஃபாமென்ஸ் மற்றும் வேகத்தை எதிர்பார்க்கலாம்.
ஐபாட் ப்ரோ 11 இன்ச், 13 இன்ச் (எம்5) அம்சங்கள்:
11 இன்ச் (2420 x 1668 பிக்சல்கள்) மற்றும் 13 இன்ச் (2752 x 2064 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1000 நிட்ஸ் எச்பிஎம் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் வழக்கமாக கிடைக்கும் ட்ரூ டோன், ஆன்டி ரெஃப்ளெக்டிவ் கோட்டிங் கிடைக்கிறது.
9 கோர் எம்5 சிப் (M5 Chip) மற்றும் 10 கோர் ஜிபியு கிடைக்கிறது. ஐபாட்ஓஎஸ் 26 (iPadOS 26) கிடைக்கிறது. 12 எம்பி வைடு ரியர் கேமரா மற்றும் 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ரியர் கேமராவில் ப்ரோரெஸ், 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. செல்பீ கேமராவிலும் 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) மற்றும் மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன.
வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.3) கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது. பேஸ் ஐடி சப்போர்ட் கிடைக்கிறது. ஆப்பிள் பென்சில் ப்ரோ மற்றும் (Apple Pencil Pro) மற்றும் மேஜிக் கீபோர்ட் (Magic Keyboard) சப்போர்ட் கிடைக்கிறது. 10 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கும். 20W மற்றும் 60W அடாப்டர் சப்போர்ட் கிடைக்கிறது.
ஐபாட் ப்ரோ 11 இன்ச் மாடல் விலை:
256 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.99,900ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,19,900ஆகவும் இருக்கிறது. 1 டிபி மெமரி (வை-பை) கொண்ட ஸ்டாண்டர்ட் கிளாஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1,59,900ஆகவும், 1 டிபி மெமரி கொண்ட நானோ டெக்ச்சர் கிளாஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1,69,900ஆகவும் இருக்கிறது.
மேலும், 2 டிபி மெமரி (வை-பை) கொண்ட ஸ்டாண்டர்ட் கிளாஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1,99,900ஆகவும், 2 டிபி மெமரி கொண்ட நானோ டெக்ச்சர் கிளாஸ் வேரியண்ட்டின் விலை ரூ.2,09,900ஆகவும் இருக்கிறது. வை-பை மற்றும் செல்லூலாருடன் கிடைக்கும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,19,900ஆக இருக்கிறது.
512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,39,900ஆகவும் இருக்கிறது. அதேபோல வை-பை மற்றும் செல்லூலாருடன் கிடைக்கும் 1 டிபி மெமரி கொண்ட ஸ்டாண்டர்ட் கிளாஸ் வேரியண்ட்டின் விலை ரூ.1,79,900ஆகவும், 1 டிபி மெமரி கொண்ட நானோ டெக்ச்சர் கிளாஸ் வேரியண்டிடின் விலை ரூ.1,89,900ஆகவும் இருக்கிறது.
மேலும், வை-பை மற்றும் செல்லூலாருடன் கனெக்டிவிட்டியுடன் கிடைக்கும் 2 டிபி மெமரி கொண்ட ஸ்டாண்டர்ட் கிளாஸ் வேரியண்ட்டின் விலை ரூ.2,19,900ஆகவும், 2 டிபி மெமரி கொண்ட நானோ டெக்ச்சர் கிளாஸ் வேரியண்ட்டின் விலை ரூ.2,29,900ஆகவும் இருக்கிறது. இப்போது, ஐபாட் ப்ரோ 13 இன்ச் மாடலின் விலைகளை பார்ப்போம்.
ஐபாட் ப்ரோ 13 இன்ச் மாடல் விலை:
256 ஜிபி மெமரி (வை-பை) வேரியண்ட்டின் விலை ரூ. 1,29,900ஆகவும், 512 ஜிபி மெமரி (வை-பை) வேரியண்ட்டின் விலை ரூ.1,49,900ஆகவும் இருக்கிறது. 256 ஜிபி மெமரி (வை-பை + செல்லூலார்) வேரியண்ட்டின் விலை ரூ.1,49,900ஆகவும், 512 ஜிபி மெமரி (வை-பை + செல்லூலார்) வேரியண்ட்டின் விலை ரூ.1,69,900ஆகவும் இருக்கிறது.
சில்வர் (Silver) மற்றும் ஸ்பேஸ் பிளாக் (Space Black) கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) மூலம் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்தியாவிலும் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அதேபோல அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஆஃப்லைன் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ரீசெல்லர்களிடம் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








