புளிச்சு போன iPhone ஆஃபர்ஸ்.. லேட்டஸ்ட் iPad மீது திடீர் விலை குறைப்பை அறிவித்த Apple.. என்ன மாடல்?
கடந்த ஆண்டு அக்.18 ஆம் தேதியன்று, ஆப்பிள் நிறுவனம் அதன் 10வது ஜெனரேஷன் ஐபேட் (Apple iPad 10th Generation) மாடலை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட சரியாக ஒரு வருடம் கழித்து, ஆப்பிள் தனது 10த் ஜென் ஐபேட்டின் விலையை குறைத்து உள்ளது.
நினைவூட்டும் வண்ணம், இந்த ஆப்பிள் ஐபேட் மாடலின் வைஃபை வேரியண்ட் ரூ.44,900 என்கிற ஆரம்ப விலையிலும், வைஃபை + செல்லுலார் வேரியண்ட் ரூ.59,900 என்கிற ஆரம்ப விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்த ஐபேட் மாடலின் மீது ரூ.5000 விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

ரூ.5000 என்கிற விலை வீழ்ச்சிக்கு பிறகு 10த் ஜென் ஐபேட்டின் ஆரம்ப விலை ரூ.39,900 ஆக குறைந்துள்ளது. இதுதவிர்த்து நடந்து கொண்டிருக்கும் ஆப்பிளின் பண்டிகை கால விற்பனையின் ஒரு பகுதியாக இதே 10த் ஜென் ஐபேட் மாடலின் மீது ரூ.4,000 உடனடி கேஷ்பேக் ஆஃபரும் கிடைக்கிறது.
இப்படியாக ஐபேட் 10த் ஜென் மாடலை ரூ.35,900 க்கு வாங்க முடியும். நினைவூட்டும் வண்ணம், இது 9த் ஜென் ஐபேட் மாடலை விட வெறும் ரூ.3,000 தான் அதிகம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் அல்லது 9த் ஜென் ஐபேட் ஆகியவற்றின் விலைகளை ஆப்பிள் நிறுவனம் குறைக்கவில்லை.
ஆப்பிள் ஐபேட் 10த் ஜென் மாடலின் அம்சங்கள்: 10வது ஜெனெரஷனில் உள்ள 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளேவானது முந்தைய மாடலில் இருந்த 10.2 இன்ச் டிஸ்பிளேவை விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் ஆகும். இது பெரியதாகவும், பிரகாசமாகவும், கூர்மையாகவும் இருப்பதால், வீடியோக்களை பார்ப்பதற்கும், கேம்களை விளையாடுவதற்கும் ஏற்றதாக அமைகிறது.
இது ஏ14 பயோனிக் சிப்பை (A14 Bionic Chip) பேக் செய்கிறது. அதாவது ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸை (iPhone 12 Series) இயக்கும் அதே சிப் தான் 10த் ஜென் ஐபேட் மாடலிலும் உள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி இது சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த மொபைல் ப்ராசஸர்களில் ஒன்றாகும்.
ஆக வீடியோ எடிட்டிங், கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் போன்ற பணிகளை 10த் ஜென் ஐபாட் வழியாக மிகவும் எளிமையான கையாள முடியும் என்று அர்த்தம். கேமராக்களை பொறுத்தவரை, இது சென்டர் ஸ்டேஜ் 12எம்பி அல்ட்ரா-வைட் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலில் உள்ள 7எம்பி செல்பீ கேமராவை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இந்த ஐபேட்டில் உள்ள கேமராவானது ஒரு பரந்த கோணத்தை வழங்குகிறது; குறிப்பாக வீடியோ கால்களின் போது அதிகமான நபர்களையும், உங்கள் பேக்கிரவுண்டில் உள்ள விஷயங்களை கைப்பற்ற முடியும். இந்த கேமராவில் உள்ள சென்டர் ஸ்டேஜ் அம்சமானது நீங்கள் நகர்ந்து கொண்டே இருந்தாலும் கூட தானாகவே உங்களை ஃபிரேமின் மையமாக வைத்திருக்கும்.
மேற்கண்ட அம்சங்களை தவிர்த்து 10த் ஜென் ஆப்பிள் ஐபேட் ஆனது நீண்ட கால பேட்டரி லைஃப், அதிக ஸ்டோரேஜ் விருப்பங்கள் மற்றும் யூஎஸ்பி-சி போர்ட் போன்ற பல மேம்பாடுகளையும் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, ஆப்பிளின் பண்டிகை கால விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. அதில் 10த் ஜென் ஐபேட் மாடல் மீது மட்டுமின்றி பல வகையான ஆப்பிள் தயாரிப்புகளின் மீதும் சலுகைகள் கிடைக்கிறது.
முக்கியமான சலுகைகளை பொறுத்தவரை, ஐபோன் 15 (iPhone 15) மற்றும் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மீது ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஐபோன் 14 (iPhone 14) மீது ரூ.4,000 தள்ளுபடியும், ஐபோன் 13 (iPhone 13) மீது ரூ.3,000 தள்ளுபடியும் மற்றும் ஐபோன் எஸ்இ 2022 (iPhone SE 2022) மாடல் மீது ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








