ஆப்பிள் ஹோம்பாட் மினி அறிமுகம்: நம்ம வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றலாம்!

|

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் ஸமார்ட்போன்களுடன் ஆப்பிள் ஹோம் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஹோம் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சிரி ஆதரவு அம்சத்தோடு அறிமுகமாகியுள்ளது.

ஆப்பிள் ஹோம்பாட் மினி அறிமுகம்: நம்ம வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றலாம்!

ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 தொடரில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அடங்கும். அதோடு ஆப்பிள் புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் ஹோம்பாட் மினி அறிமுகம்: நம்ம வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றலாம்!

ஆப்பிள் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஹோம் பாட் மினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சிறி உள்ளடக்கத்துடன் வருகிறது. இந்த ஸ்பீக்கர் உங்கள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

ஆப்பிள் ஹோம் பாட் மினியின் விலை $99 (தோராயமாக ரூ.9,900) எனவும் இந்த சாதனத்தின் முன்கூட்டிய ஆர்டர் வெள்ளை மற்றும் ஸ்பேஸ் கிரே என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. இதற்கான முன்பதிவு நவம்பர் 6 முதல் தொடங்கும். ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விற்பனையானது நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும்.

ஆப்பிள் ஹோம் பாட் மினி: அம்சங்கள்

ஆப்பிள் ஹோம் பாட் மினி கேம், ஆடியோ கட்டுப்பாட்டு பின்னிணைப்புக்கான டச் திறன் கொண்ட டாப் பகுதியுடன் வருகிறது. சிரி பயன்பாடு ஆக்டிவேட்டில் இருக்கும் போது இந்த பகுதி ஒளிரும் படியாக காட்சியளிக்கும்.

ஸ்மார்ட் ஸ்பீக்கரில் 360 டிகிரி ஒலியும் வழங்குகிறது. ஹோம்பாட் மினி எஸ்5 ப்ராசஸர் அம்சத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஹோம் பாட் மினியில் உள்ள சிரி உங்கள் வீட்டு உறுப்பினர்கள் அனைவரின் குரலையும் அங்கீகரிக்கும். அனைவரின் கூற்றுக்கேற்ப ஸ்மார்ட் சாதனங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஹோம்பாட்டை உங்கள் ஐபோனில் உள்ள பயன்பாடுகளில் அணுகுவதன் மூலம் குறுஞ்செய்தி(தகவல்களை) படித்தும் அனுப்பலாம்.

இந்த ஹோம்பாட் அனைத்து ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சேவைகளையும் கட்டுப்படுத்துகிறது. வழக்கம் போல் ஆப்பிள் தனியுரிமை மீது அதிக கவனம் செலுத்தியுள்ளது. தேவைப்பட்டால் மட்டுமே இந்த சாதனத்தை ஆடியோ சாதனமாகப் பயன்படுத்த முடியும். இது ஆடியோ சேமிப்பிற்கான வசதியையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Homepod Mini Smart Speaker Comes with Inbuilt Siri: Here the Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X