Apple HomePod: மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்! விலை இவ்வளவுதான்!

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியா மற்றும் உலக நாடுகளிடையே நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாகஇந்த புதிய ஹோம்பட் ஸ்பீக்கருக்கு ஐஒஎஸ் மற்றும் ஐபேட் 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும்இந்த புதிய அப்டேட்டில் இந்தியாவுக்கான ஆங்கில மொழி சிரி குரல் வசதியும் சேர்கப்பட்டுள்ளது.
;

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சாதனம் முன்னதாக சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம்செய்யப்பட்டது. மேலும் அறிமுகமானதும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 2018-ம் ஆண்டு முதல்விற்பனையை துவங்கியது.

 7-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது

7-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது

மேலும் ஆப்பிள் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ஹோம்பாட் சாதனம் ஆனது 7-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு இதனை குரல் வழியே இயக்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தைக் கொண்டு செய்திகள், இசை மற்றும் வீட்டில் உள்ள கனெக்ட்டெட் சாதனங்களை இயக்க முடியும். இதில் உள்ள சென்சார்கள் ஸ்பீக்கர்கள் வீட்டில் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப ஆடியோ அளவுகளை மற்றிக் கொள்ளும்வசதியை கொண்டுள்ளது.

ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ஆறு மைக்ரோபோன்கள்

ஆறு மைக்ரோபோன்கள்

இந்த புதிய சாதனத்தில் ஆறு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளது, பின்பு இது பரிந்துரைகளை அறிந்துகொண்டு இசை சார்ந்த தேடல்களின் பதில்களை அதிவேகமாக வழங்குகிறது.

 ஏ8 சிப்

ஹோம்பாட் மாடலில் ஏ8 சிப் இடம்பெற்றுள்ளது, மேலும் இதில் பயனர்களின் உரையாடல்கள் அனைத்தும் சாதனத்திலேயேசேமிக்கப்பட்டு, அவை முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன

குறைவான விலையில்?

குறைவான விலையில்?

இந்த புதிய சாதனத்தில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய ஊஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆடியோ தரத்தைமேம்படுத்தி தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.19,9990-ஆகஉள்ளது. மற்ற சந்தைகளில் ஒப்பிடும் போது ஆப்பிள் ஹோம்பாட் விலை இந்தியாவில் மட்டும் குறைவான
விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple HomePod India Price Officially Announced : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X