பட்ஜெட் வாசிகளை குறிவைக்கும் ஆப்பிள்; மார்ச் 27-ல் வெளியாகப்போவது என்ன?

ஏனெனில் கடந்த ஆண்டு, மலிவான விலைப்பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட 9.7 அங்குல ஐபாட் ஆனது பள்ளிகளில் 'பல்க்' விற்பனையை சந்தித்தது மற்றும் பள்ளி மாணவர்கள் வாங்கும் அளவிற்கு மிகவும் மலிவானதாகவும் இருந்தது.

|

மிகவும் எதிர்பாராத நேரத்தில், ஆப்பிள் நிறுவனம் இம்மாத இறுதியில் ஒரு பெரிய பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. ​​கோப்பர்டினோவை அடிப்படையாக கொண்டுள்ள இந்த தொழில்நுட்ப நிறுவனம், மார்ச் 27 அன்று சிகாகோவில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் "சிறப்பு கல்விக்கான கவனம்" என்கிற பெயரின்கீழ் ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் வாசிகளை குறிவைக்கும் ஆப்பிள்; மார்ச் 27ல் வெளியாகப்போவது என்ன?

எப்பொழுதும் போல, ஆப்பிள் நிறுவனம் இம்முறையும் எந்தவிதமான வெளியீடு சார்ந்த விவரங்களையும் வழங்கவில்லை, ஆனால் வெளியான அழைப்பிதழில் இருந்து சில யூகங்களை பெற முடிகிறது. இந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபாட் மாதிரிகளை அறிவிக்க வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு, மலிவான விலைப்பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட 9.7 அங்குல ஐபாட் ஆனது பள்ளிகளில் 'பல்க்' விற்பனையை சந்தித்தது மற்றும் பள்ளி மாணவர்கள் வாங்கும் அளவிற்கு மிகவும் மலிவானதாகவும் இருந்தது.

மலிவான விலையில் ஐபாட்.!

மலிவான விலையில் ஐபாட்.!

இதுவரை வெளியான வந்தந்திகளின்படி, ஒரு 9.7 அங்குல ஐபாட் ஆனது சுமார் 259 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைப்புள்ளியின் கீழ் அறிவிக்கப்படலாம் என்கின்றன. இது தற்போதைய 329 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மாதிரி விட, மலிவான விலை நிர்ணயமாகும். கூடுதல் சுவாரசியம் என்னவெனில், வெளியான அழைப்பிதழில் கையால் வரையப்பட்ட ஆப்பிள் லோகோ இடம்பெற்றுள்ளது, இது ஆப்பிள் பென்சிலுடன் தொடர்புடைய ஏதோவொன்றை குறிப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

பட்ஜெட் விலையிலான மேக்புக் அல்லது மேக்புக் ஏர்.!

பட்ஜெட் விலையிலான மேக்புக் அல்லது மேக்புக் ஏர்.!

தவிர ஆப்பிள் இந்த ஆண்டு ஒரு புதிய நுழைவுநிலை மேக்புக் ஒன்றையும் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஒரு மலிவான மேக்புக் ஏர் சாதனமும் வெளியாகலாம். ஒருவேளை மார்ச் 27 நிகழ்வில் ஐபாட் வெளியாகவிட்டால், பட்ஜெட் விலையிலான மேக்புக் அல்லது மேக்புக் ஏர் அறிவிக்கப்படலாம்.

இடைப்பட்ட விலை.!

இடைப்பட்ட விலை.!

டிஜிடைம்ஸ் மற்றும் நம்பகமான கேஜிஐ செக்யூரிட்டீஸ் ஆய்வாளரான மிங்-சி கோவ் அவர்களின் அறிக்கைகளின்படி, வெளியாகும் ஆப்பிள் மேக்புக் ஏர் ஆனது 799 - 899 அமெரிக்கடாலருக்கு இடைப்பட்ட விலையுடையதாக இருக்கும். ஆக, ஆப்பிள் சாதனங்களை வாங்க துடிக்கும் பட்ஜெட் வாசிகளே மார்ச் 27-ஆம் தேதி நிகழும் அறிவிப்புகளுக்கு தயாராக இருங்கள்.

மாணவர்களுக்கான சரியான சாதனமாக இருக்கும்.!

மாணவர்களுக்கான சரியான சாதனமாக இருக்கும்.!

அம்சங்களை பொறுத்தமட்டில், 13.3 அங்குல மேக்புக் ஏர் ஆனது 2560 x 1600 என்கிற தீர்மானம் கொண்ட ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டுருக்குமென கூறப்படுகிறது. ரெட்டினா காட்சி, மேக்புக் ஏர் அப்டேட், புதிய யூஎஸ்பி சி-போர்ட்டுகள், ஒரு மெல்லிய மற்றும் இலகுவான உடல் வடிவமைப்புடன் கூடிய மலிவு விலை போன்றவைகளின் காரணமாக, இது மாணவர்களுக்கான சரியான சாதனமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
மலிவான ஐபோன் எஸ்இ மாதிரி.!

மலிவான ஐபோன் எஸ்இ மாதிரி.!

இது தவிர, ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ் மாடல் ஒன்றையும் வெளியிடலாம். ஏனெனில் நிறுவனத்தின் முதல் எஸ்இ மாடல் ஆனது கடந்த மார்ச் 2016-ல் தான் வெளியானது. ஆக இந்த நிகழ்வில் ஒரு மலிவான ஐபோன் எஸ்இ மாதிரியொன்று அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மார்ச் 27 அன்று நிகழும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை உடனுக்குடன் அணுக தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Apple to Hold an Event on March 27, Expected to Launch New iPad Models. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X