Apple Watch Series 10: இன்னைக்கு சும்மா களைகட்ட போகுது.. இந்த மாடல்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
ஒட்டுமொத்த டெக் உலகமும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வு (Apple It's Glowtime Event) இன்று நடக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) மாடல்கள் மட்டுமல்லாமல், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (Apple Watch Series 10) மாடல்களும் வெளியாக இருக்கின்றன. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (Apple Watch Series 9) மாடல்களில் இருந்து என்ன புதிதாக இதில் எதிர்பார்க்கலாம்? விலை எப்படி இருக்கும் உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அம்சங்கள் (Apple Watch Series 10 Specifications): இந்த மாடல்களில் 44மிமீ மற்றும் 48மிமீ டிஸ்பிளே சைஸ் எதிர்பார்க்கலாம். இது கிட்டத்தட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல்களைவிட பெரியது. ஆகவே, பெரிய டிஸ்பிளேவை விரும்பும் ஆப்பிள் பிரியர்களிடையே இந்த மாடல்கள் நல்ல வரவேற்பை பெறலாம். இருப்பினும், ஸ்லிம்மர் டிசைனில் வெளியாகிறது.

அதேபோல வாட்ச் பேஸ்களில் புதிதாக ரெப்லெக்சன்ஸ் (Reflections) அம்சம் சேர்க்கப்பட இருக்கிறது. ஈசிஜி (ECG) மற்றும் ஹார்ட் ரேட் சென்சார் (Heart Rate Sensor) மேம்படுத்தப்படுகிறது. ஸ்லீப் அப்னியா டிடெக்சன் (Sleep apnea Detection) எதிர்பார்க்கலாம். இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடல்களில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்காக வாட்டர் ரெசிஸ்டன்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, கூடுதலாக 20 மீட்டர்கள் ஆழம் வரையில் தாக்குபிடிக்கும் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் (Apple Watch Ultra) வந்த டீப் ஆப் (Depth App) சப்போர்ட் இந்த மாடல்களிலும் எதிர்பார்க்கலாம். டிசைனை பார்க்கையில் இந்த மாடல்கலிலும் வழக்கமாக டிஜிட்டல் கிரவுண் (Digital Crown) மற்றும் சைடு பட்டன் (Side Button) இடம்பெற வாய்ப்புள்ளது.
அதேபோல டபுள் டேப் கெஸ்ச்சர் (Double Tap Gesture) சப்போர்ட் எதிர்பார்க்கலாம். பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்த்தால், எஸ்10 (S10) சிப்செட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், முந்தைய மாடல்களைவிட தின்னர் பெசல்கள் (Thinner Bezels) கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடல்களின் ஆரம்ப விலை ரூ.35,000 பட்ஜெட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் விலை மாறுபடலாம். அறிமுகத்துக்கு பிறகு விற்பனை தேதி மற்றும் இந்திய விலை நிர்ணயம் தெரியவரும். ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வானது, இந்திய நேரடி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிகழ்வில் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல்கள் பிரதானமாக வெளியாகின்றன. இதுபோக ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 (AirPods 4), ஆப்பிள் ஏர் பாட்ஸ் எஸ்இ (AirPods SE) மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடல்களும் வெளியாக இருக்கின்றன.
இந்த ஆப்பிள் இட்ஸ் க்ளோடைம் நிகழ்வை, ஆப்பிள் வெப்சைட் (Apple Website), ஆப்பிள் யூடியூப் (Apple YouTube) மற்றும் ஆப்பிள் டிவி ஆப் (Apple TV App) மூலம் லைவ்வாக பார்க்கலாம். இந்தியாவில் இரவு 10.30 மணிக்கு தொடங்கப்படுவதால், வெளியாகும் மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் செப்டம்பர் 10ஆம் தேதி நள்ளிரவில் தெரியவரும்.
இருப்பினும், ஐபோன் 16 சீரிஸ் மாடல்களின் விலை மட்டும் உடனுக்குடன் தெரியவர வாய்ப்புள்ளது. சாம்சங் எஸ்24 அல்ட்ரா மாடல்களில் கிட்டத்தட்ட ஆப்பிளின் 15 சீரிஸ் மாடல்களில் வந்த பெரும்பாலான பீச்சர்கள் பேக் செய்யப்பட்டன. ஆகவே, இப்போது வரும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் எதிர்பார்க்காத பல்வேறு அம்சங்கள் பேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








