Apple Vision Pro விற்பனை.. விலைய கேட்டுட்டு ஜகா வாங்கிய முரட்டு Fans.. 12 கேமரா, 2 OLED டிஸ்பிளேன்னா சும்மாவா!
ஐபோன்களின் விலை நிர்ணயத்தை பார்த்தே ஷாக் ஆகிறவர்கள் ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) விலையை கேட்டால் என்ன ஆவர்களோ தெரியவில்லை! ஏனென்றால் தீவிரமான ஆப்பிள் ரசிகர்கள் கூட பின்வாங்கும் அளவிலான விலைக்கு ஆப்பிள் விஷன் ப்ரோ விற்பனைக்கு வரவுள்ளது!
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட் (Apple's First Mixed Reality Headset) ஆன ஆப்பிள் விஷன் ப்ரோ, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (Worldwide Developers Conference - WWDC 2023) அறிவிக்கப்பட்டது.

நினைவூட்டும் வண்ணம் இது ஏஆர் (AR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented reality) மற்றும் விஆர் (VR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality) ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கும் ஒரு ஆப்பிள் ஹெட்செட் ஆகும்.
எப்போது முதல் விற்பனை? ஆப்பிள் விஷன் ப்ரோவிற்கான முன்பதிவுகள், ஜனவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், இது பிப்ரவரி 2ஆம் தேதி முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும், ஆப்பிள் நிறுவனத்திவெப் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும்.

என்ன விலை? ஆப்பிள் விஷன் ப்ரோவின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 3,499 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க கிடைக்கும். அதாவது இந்திய ரூபாய் மதின்பின்படி தோராயமாக ரூ.2,90,000 க்கு வாங்க கிடைக்கும். மற்ற நாடுகளில் ஆப்பிள் விஷன் ப்ரோவின் விலை நிர்ணயம் மற்றும் வெளியீட்டு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் ஆனது சோலோ க்னிட் பேண்ட் (Solo Knit Band) மற்றும் டூயல் லூப் பேண்ட் (Dual Loop Band) உடன் ஷிப்பிங் செய்யப்படும். இந்த பேக்கேஜில் ஒரு லவ்ட் சீல் (Light Seal) மற்றும் இரண்டு லைட் சீல் குஷன்கள் (Light Seal Cushions) கூடவே பாலிஷிங் க்ளாத்தும் (Polishing cloth) இருக்கும்.

மேலும் ஒரு பேட்டரி (Battery), ஒரு யூஎஸ்பி டைப்-சி கேபிள் (USB Type-C cable), ஒரு யூஎஸ்பி டைப்-சி அடாப்டர் (USB Type-C adapter) மற்றும் ஹெட்செட்டின் முன்பக்கத்திற்கான ஆப்பிள் விஷன் ப்ரோ கவர் (Apple Vision Pro Cover) ஆகியவைகளும் இருக்கும்.
விஷன் கரெக்ஷனை (Vision correction) செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், ஸெய்ஸ் ஆப்டிகல் இன்சர்ட்ஸ் (ZEISS Optical Inserts) அணுக கிடைக்கும். இதற்கான ரீடர்ஸ் 99 அமெரிக்க டாலர்களுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.8,000 க்கும். ப்ரெஸ்க்ரிப்ஷன் லென்ஸ்கள் (Prescription lenses) 149 அமெரிக்க டாலர்களுக்கு, அதாவது தோராயமாக ரூ.12,000 க்கும் வாங்க கிடைக்கும்.
என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் ஆனது விஷன்ஓஎஸ் (visionOS) மூலம் இயங்குகிறது. இது ஹை-ரெசல்யூஷன் உடனான 2 மைக்ரோ-ஓஎல்இடி டிஸ்பிளேக்களை (High-resolution micro-OLED displays) கொண்டுள்ளது. இந்த ஹெட்செட் ஆப்பிளின் எம்2 சிப்களால் (Apple's M2 Chip) இயக்கப்படுகிறது.
மேலும் ஆப்பிளின் இந்த மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட் ஆனது 12 கேமராக்கள், 5 சென்சார்கள் மற்றும் 6 மைக்ரோஃபோன்களிலிருந்து இன்புட் ப்ராசஸை பெறும் ஆர்1 சிப்பையும் கொண்டுள்ளது. இந்த ஹெட்செட் ஒரு முப்பரிமாண யூஸர் இன்டர்பேஸ் மற்றும் ஒரு பயனரின் கண்கள், கைகள் மற்றும் குரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் இன்புட் சிஸ்டமை கொண்டுள்ளது.
மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோவில் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஐபேட்ஓஎஸ் (iPadOS) அடிப்படையிலான 1 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கள் (Apps) அணுக கிடைக்கும். ப்ரொடெக்டிவிட்டி தேவைகள் (Productivity Needs) உள்ள பயனர்கள் இந்த ஹெட்செட்டை மேஜிக் கீபோர்டு (Magic Keyboard) மற்றும் டிராக்பேடு (Trackpad) உடனும் இணைக்கலாம்.
இது ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+), டிஸ்னி+ மேக்ஸ் (Disney+ Max) மற்றும் பல தளங்களில் இருந்து நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் ஸ்ட்ரீம் செய்யவும் அனுமதிக்கும். கேமர்களுக்கு, ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் 250 க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஆர்கேட்டைட்டில்கள் அணுக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








