Home
Gadgets

அண்ணன் தான் வரவா.. அக்.30ல் அடுத்த Apple Event.. Scary Fast நிகழ்வில் என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்?

ஐபோன் 15 சீரீஸை (iPhone 15 Series) அறிமுகம் செய்ததோடு, இந்த 2023 ஆம் ஆண்டில் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வேலை முடிந்து விட்டதென்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால்.. "அதை நான் தான் முடிவு பண்ணனும்" என்று கூறும்படியாக ஆப்பிள் நிறுவனம் ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி ஸ்கேரி ஃபாஸ்ட் (Scary Fast) என்கிற பெயரின் கீழ், வெளியீட்டு நிகழ்வு (Launch Event) ஒன்றை நடத்தவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிளின் ஸ்கேரி ஃபாஸ்ட் லான்ச் ஈவென்ட்டில் என்னென்ன தயரிப்புகள் அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

அக்.30ல் அடுத்த Apple Event.. என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்?

இந்த வெளியீட்டு நிகழ்விற்கான ஆப்பிள் நிறுவனத்தின் அழைப்பிதழின்படி, ஸ்கேரி ஃபாஸ்ட் ஈவென்ட் ஆனது அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும். இந்திய நேரப்படி இந்த நிகழ்வு அக்டோபர் 31 ஆம் தேதி காலை 5:30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ஆப்பிள்.காம் (apple.com) மற்றும் யூட்யூப் சேனல் (YouTube Channel) வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்யப்படும்.

ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்வை பற்றிய குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை என்றாலும், இது ஒரு மேக் வெளியீட்டு நிகழ்வாக (Mac Launch Event) இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் ஆப்பிளின் புதிய ஐமேக் (iMac) மாடல்கள் மற்றும் மேக்புக் (MacBook) மாடல்கள் அறிமுகம் செய்யலாம்.

அக்.30ல் அடுத்த Apple Event.. என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்?

இந்த நிகழ்வில் 24-இன்ச் ஐமேக் (24-inch iMac) மாடலின் புதுப்பிக்கப்பட்ட மாடல் (Updated Model) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு முதல் 24-இன்ச் ஐமேக் மாடலானது எம்1 சிப் (M1 Chip) மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஏழு தனித்துவமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 500 நிட்ஸ் பீட்ஸ் ப்ரைட்னஸ் (500 nits Peak Brightness) உடனான 4.5கே ரெட்டினா டிஸ்பிளேவை (4.5K Retina Display) கொண்டுள்ளது.

புதிய ஐமேக் மாடல்கள், ஆப்பிளின் சமீபத்திய எம்3 சிப் (M3 Chip) உடன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐமேக் மாடல்களின் ப்ரோ வெர்ஷன்கள் (iMac Pro Versions), அடுத்த ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டில் தான் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்.30ல் அடுத்த Apple Event.. என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்?

ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் ஆப்பிளின் புதிய ஐபாட் மாடல்கள் (New iPad Models) அறிமுகமாகுமா என்று கேட்டால்.. அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் மாடல்கள் அடுத்த ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் அறிமுகமாகும் என்று நம்பப்படுகிறது.

ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வானது ஆப்பிள் ஆர்வலர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் உறுதியளிக்கிறது. ஏனெனில் அவர்கள் புதிய ஐமேக் மாடல்கள் மற்றும் மேக்புக் மாடல்கள் வெளியீட்டை எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்பதை ஆப்பிள் நிறுவனம் நன்கு அறியும். நினைவூட்டும் வண்ணம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வெளியீட்டு நிகழ்வில், ஐபோன் 15 சீரீஸ் மாடல்கள் அறிமுகமாகின.

ஐபோன் 15 சீரிஸின் கீழ் ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகின.

ஆப்பிளின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 15 மாடலானது ரூ.79,900 க்கும், ஐபோன் 15 பிளஸ் மாடலானது ரூ.89,900 க்கும், ஐபோன் 15 ப்ரோ மாடலானது ரூ.1,34,900 க்கும், ஆப்பிளின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலானது ரூ.1,59,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Confirmed Scary Fast Launch Event on October 30 New iMacs and MacBooks Expected
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X