ரூ.4000 விலை குறைப்பு.. ரூ.5000 தள்ளுபடி.. Apple-ன் இந்த லேட்டஸ்ட் iPad-ஐ வாங்க சரியான நேரம்! என்ன மாடல்?
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 10த் ஜெனெரேஷன் ஐபேட் (10th Generation iPad,) மீது ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபேட் மாடலின் அசல் விலை என்ன? தள்ளுபடிக்கு பிறகான புதிய விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
அசல் விலையும், தள்ளுபடி விலையும்: ஆப்பிள் 10த் ஜெனெரேஷன் ஐபேட் மாடலின் அசல் விலை ரூ.44,900 ஆகும். தற்போது ஆப்பிள் நிறுவனம் இதன் மீது ரூ.5000 தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் 10த் ஜெனெரேஷன் ஐபேட்டின் விலை ரூ.39,900 ஆக குறைந்துள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் ( Apple Online Store) பிரதிபலிக்கிறது.

நேரடி தள்ளுபடி தவிர்த்து, ஆப்பிளின் தீபாவளி பண்டிகை விற்பனையின் (Apple Diwali Festival Sale) ஒரு பகுதியாக, 10த் ஜென் ஐபேட் மாடலின் மீது எச்டிஎஃப்சி வங்கி சலுகையும் அணுக கிடைக்கிறது. இதன் கீழ் எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) பயனர்களுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும்.
ஆக, மேற்கண்ட இரண்டு சலுகைகளையும் (ஆப்பிளின் நேரடி தள்ளுபடி ரூ.4000 + எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டு தள்ளுபடி ரூ.5000 ஆகிய இரண்டையும்) சரியாக பயன்படுத்தினால் ஆப்பிள் 10த் ஜெனெரேஷன் ஐபேட் மீது முழுதாக ரூ.9000 தள்ளுபடி கிடைக்கும். அதாவது இதன் விலையை ரூ.35,900 வரை குறைக்க முடியும்.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபாட் ப்ரோ (iPad Pro), ஐபாட் ஏர் (iPad Air) அல்லது 9த் ஜென் ஐபாட் (9th-gen iPad) ஆகியவற்றின் விலைகளை குறைக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆப்பிளின் தீபாவளி விற்பனையின் கீழ் சில சலுகைகள் கிடைக்கிறது.

ஆப்பிள் 10த் ஜென் ஐபேட் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது ஒரு பிளாட்-எட்ஜ் வடிவமைப்பு (Flat-edge Design) கொண்டுள்ளது மற்றும் 5ஜி-க்கான ஆதரவை (5G Support) வழங்குகிறது. இந்த டேப்லெட்டில் ஆப்பிளின் கஸ்டம் லைட்னிங் போர்ட் (Lightning Port) இல்லை. மாறாக புதிய ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) மாடல்களை போலவே டைப்-சி போர்ட் (Type-C Port) உடன் வருகிறது. ஆக நீங்களொரு ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால் ஒரு பொதுவான சார்ஜரை மட்டும் எடுத்து சென்றால் போதும்.
ஆப்பிளின் இந்த டேப்லெட்டில் 10.9 இன்ச் டிஸ்பிளே உள்ளது. இந்த ஐபாட்டின் மேலே உள்ள பவர் பட்டன் (Power Button) ஆனது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனராகவும் (Finger Print Scanner) செயல்படும். கேமராக்களை பொறுத்தவரை, பேக் பேனலில் 12 மெகாபிக்சல் ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
10த் ஜென் ஐபாட் மாடலானது அடுத்த பல ஆண்டுகளுக்கான சாஃப்ட்வேர் அப்டேட்களை (Software Updates) பெறத் தகுதியான ஒரு மாடலாகும். ஆக இதுவொரு ஃபியூச்சர் டிவைஸ் (Future Device) ஆகவும் இருக்கும். அதாவது புதிய ஜெனெரேஷன் மாடல்கள் வந்தாலும் கூட இது சிறப்பானதாக, போட்டித்தன்மை மிக்கதாக இருக்கும் என்று அர்த்தம்.

ஆப்பிளின் இந்த 10த் ஜெனெரேஷன் ஐபாட் ஆனது ஆப்பிளின் சொந்த ஏ14 பயோனிக் சிப்செட் (A14 Bionic Chipset) மூலம் இயக்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக பார்த்தல், இது மிகவும் பழைய சிப்செட் ஆகும், ஆனால் ரியல்-வேர்ல்ட் பெர்ஃபார்மென்ஸிற்கு (Real-world Performance) வரும்போது இது இன்னமும் சிறப்பாக செயல்படுகிறது.
மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மேஜிக் கீபோர்டு ஃபோலியோ கவர் (Magic Keyboard Folio Cover), 5ஜி கனெக்டிவிட்டி மற்றும் பலவற்றிற்கான ஆதரவுடன் வருகிறது. ஒட்டுமொத்தமாக 10த் ஜென் ஐபாட் ஆனது ஐஓஎஸ் பயனராக மாற விரும்பும் எவருக்குமே ஒரு தேர்வாக இருக்கும். ஆக முடிந்தவரை, ஆப்பிள் வழங்கும் இந்த ரூ.9,000 தள்ளுபடியை தவறவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








