கொடுத்த காசுக்கு ஒரு புண்ணியமும் இல்லை; சிக்கலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்.!

நீங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்திருந்தால் இதோ அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்

|

வயர்லெஸ் ஹெட்போன்கள் என்றாலே பலருக்கு முதலில் ஞாபகம் வருவது ஆப்பிள் ஏர்பாட்ஸ் என்பதுதான். ஆனால் இந்த ஏர்பாட்ஸ் உங்களுக்கு நிறைவை தருகிறதா? ஏனெனில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் பயன்படுத்துபவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அழைப்பு விடுபடுதல், ஆடியோ குறைகள் ஆகியவைகளை கூறலாம். நீங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்திருந்தால் இதோ அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்

கொடுத்த காசுக்கு ஒரு புண்ணியமும் இல்லை; சிக்கலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்.!

இந்த ஏர்பாட்ஸ் ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், இது நிச்சயமாக ஏர்பாட்ஸ் பயனர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் அளவை வைத்து கணக்கிடும்போது இவற்றில் ஏதேனும் ஒன்றை தொலைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, நீங்கள் உங்கள் ஐபோனில் உள்ள ஃபைண்ட் மை போன் மூலம் இதனை கண்டுபிடிக்க முடியும்

இந்த வசதியை நீங்கள் பெற உங்கள் போனின் முதலில் 'பைண்ட் மை ஐபோன்' செயலியை நீங்க்ள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு உங்களுக்கு ஆப்பிள் ஐடி தேவை என்பதும் பின்னர் இதனை ஐகிலோடு மூலம் டவுன்லோடு செய்யலாம் என்பதும் தெரிந்ததே.

இன்ஸ்டால் செய்த பின்னர் மைபோன் செட்டிங் சென்று அதில் உள்ள ஏர்பாட்ஸ் செலக்ட் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு மேப் தெரியும். அதில் ஏர்பாட்ஸ் கடைசியாக பயன்படுத்தப்பட்ட இடமும் ஒரு பச்சை டாட் மூலம் தெரிய வரும். ஒருவேளை அது டர்ன் ஆப் ஆகியிருந்தால் மேப்பில் அது எங்கே இருக்கலாம் என்ற ஐடியா கிடைக்கும்

இணைக்க முடியவில்லையா?

இணைக்க முடியவில்லையா?

இந்த ஏர்பாட்ஸ் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் அடுத்த பிரச்சனை இதனை டிவைஸ் உடன் இணைக்க முடியாமல் திண்டாடுவதுதான். இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஏர்பாட்ஸை இணைத்தவுடன் சார்ஜ் செய்யுங்கள் பின்னர் பத்து வினாடிகள் கழித்து அது வேலை செய்கிறதா? என்று சோதனை செய்யலாம். இப்படியும் வேலை செய்யவில்லை என்றால் புளுடூத்தை ஆன் செய்துவிட்டு போனை ஆப் செய்து பின் ஆன் செய்யுங்கள். அப்படியும் வேலை செய்யவில்லை என்றால் ஏர்பாட்ஸை ரீசெட் செய்யுங்கள்

ஒரு ஆண்ட்ராய்ட் சாதனத்துடன் தங்கள் ஏர்பாட்ஸ்களைப் பயன்படுத்தும் பயனர்கள் பெரும்பாலும் ஆடியோ வெளியீடு பிரச்சனைகளுக்குள் செல்கின்றனர். ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுதி, ஐஒஎஸ்-இல் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஏர்பாட்ஸ் இல் நிறைய அம்சங்கள் உங்கள் ஐபோன் அல்லது ஐபாட் உடன் தொடர்பு கொள்ள W1 சில்லுகளைப் பயன்படுத்துவதால், இது நடக்கும், ஆனால் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த சிப் இல்லாததால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான புளூடூத் ஆடியோ சாதனங்களில், இரண்டு தொகுதி அளவுகள் உள்ளன: மூல சாதனத்தின் தொகுதி, மற்றும் ஆடியோ சாதனத்தின் தொகுதி. ஏர்பாட்ஸ் ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைக்கப்படும் போது, அது ஐஒஎஸ்இல் முடிந்த அளவு தானாகவே கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒரு தவறு உள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வால்யூம் ராக்கர்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும்

கால் டிராப்:

கால் டிராப்:

புளூடுத் ஆடியோ சாதனங்களில் கால் டிராப் அதிகளவில் இருக்கும். ஆனால் இந்த ஏர்பாட்ஸை பொருத்தவரையில் ஒருபக்க காதில் அழைப்பு சத்தம் கேட்கும் என்பதால் பெரும்பாலும் கால் டிராப் ஏற்பட வாய்ப்பு இல்லை. இன்னொரு வாய்ப்பாக ஏர்டிராப் பயன்படுத்தும்போது மைக்ரோ போனை செலக்ட் செய்து கொண்டால் கால் டிராப் ஏற்படாது. ஆனால் இதற்கு பேட்டரி அதிக செலவாகும்

பேட்டரியின் லைஃப்

பேட்டரியின் லைஃப்

ஏர்பாட்ஸ் மூலம் முழுவதும் சார்ஜ் இருந்தால் சுமார் ஐந்து மணி நேரம் நீங்கள் இசையை ரசித்து கேட்கலாம். அதன்பின்னர் பேட்டரி வெகுவாக குறைந்துவிடும். ஒருவேளை குறைவான நேரமே பேட்டரியின் லைஃப் இருந்தால் அதற்கும் ஒரு வழி உள்ளது. முதலில் நீங்கள் ஆட்டோமெட்டி இயர் டிடெக்சன் ஆன் செய்து கொள்ளுங்கள். இதனால் ஏதாவது வேலையாக நீங்கள் ஆப் செய்யாமல் காதில் இருந்து ஏர்பாட்ஸை எடுத்தால் தானாகவே ஆப் ஆகிவிடும்.

ஏர்பாட்ஸை எப்படி ரீசெட் செய்வது?

ஏர்பாட்ஸ் மூலம் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை ரீசெட் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம் .சரி, இப்போது எப்படி ரீசெட் செய்வது என்பது குறித்து பார்ப்போம்

ஏர்பாட்ஸ் பின்பக்கம் உள்ள பட்டனை ஒரு பதினைந்து வினாடிகளுக்கு தொடர்ந்து அழுத்த வேண்டும். அதில் உள்ள ஆரஞ்ச் லைட் பிளாஷ் ஆகும் வரை அழுத்திவிட்டு பின்னர் அடுத்த ஐபோன் அல்லது ஐபேட் எடுத்து கொண்டு அதில் ரீகனெக்ட் செய்யவும். ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் இதனை மேனுவலாகத்தான் கனெக்ட் செய்ய வேண்டும். இதுவே ரீசெட் செய்யும் முறைகள் ஆகும்

வெறும் ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி6 பிளே.!வெறும் ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி6 பிளே.!

Best Mobiles in India

Read more about:
English summary
AirPods users often come across common problems such as call drops, pairing errors, audio woes, and others. If you are one of them, this might help you.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X