Home
Gadgets

கஸ்டமர்களின் காது முக்கியம் பிகிலு.. AirPods Pro-வில் 3 முக்கிய அம்சங்களை சேர்த்த Apple நிறுவனம்!

Apple AirPods Pro New Features: ஆப்பிள் நிறுவனத்தின் இட்ஸ் க்ளோடைம் வெளியீட்டு நிகழ்வில் (Apple Its Glowtime Launch Event ), புதிய ஏர்போட்ஸ் 4 வேரியண்ட்கள் மற்றும் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்ஸிற்கான புதிய கலர் ஆப்ஷன்களோடு சேர்த்து ஏர்போட்ஸ் ப்ரோ இயர்பட்ஸிற்கான புதிய அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காது கேளாமை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஏர்போட்ஸ் ப்ரோவில் சில புதிய அம்சங்களை அறிவித்து உள்ளது.

இந்த அம்சங்கள் 160,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஆப்பிளின் விரிவான செவிப்புலன் ஆய்வின் (Apple's extensive hearing study) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன அம்சங்கள் ஏர்போட்ஸ் ப்ரோவில் சேர்க்கப்பட்டுள்ளது? ஆப்பிளின் இட்ஸ் க்ளோடைம் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர்போட்ஸ் 4 வேரியண்ட்களின் விலை நிர்ணயம் என்ன? ஏர்போட்ஸ் மேக்ஸின் புதிய கலர் ஆப்ஷன்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

AirPods Pro-வில் 3 முக்கிய அம்சங்களை சேர்த்த Apple நிறுவனம்!

ஏர்போட்ஸ் ப்ரோ இப்போது ஹியரிங் ப்ரொடெக்ஷன் (Hearing Protection) அம்சத்தை வழங்கும். இந்த அம்சமானது மெஷின் லேர்னிங்கை (Machine Learning) பயன்படுத்தி ஆட்டோமேட்டிக் ஆகவே உரத்த ஒலிகளை சீர்செய்து, அவற்றின் தீவிரத்தைக் குறைத்து, பயனர்களின் செவிப்புலன்களை பாதுகாக்கும். அதிக சத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு, மேலும் காது கேளாமை ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தின்கீழ் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏர்போட்ஸ் ப்ரோவில் சேர்க்கப்பட்டு உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் - ஹியரிங் டெஸ்ட் (Hearing test) ஆகும். இது செவித்திறன் இழப்பை கண்டறிய உதவும் அம்சமாகும். இதன் கீழான சோதனை முடிவுகள் தெளிவான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட ரிப்போர்ட் ஆக கிடைக்கும்.

AirPods Pro-வில் 3 முக்கிய அம்சங்களை சேர்த்த Apple நிறுவனம்!

மேற்கண்ட 2 அம்சங்களை விட முக்கியமான அப்டேட் என்னவென்றால்.. ஏர்போட்ஸ் ப்ரோ ஆனது இப்போது ஒரு மருத்துவ-தர ஹியரிங் எய்ட் (Clinical-grade hearing aid) ஆக செயல்படும் திறனை கொண்டுள்ளது. இது மிகவும் அற்புதமான அப்டேட்களில் ஒன்றாகும். விரைவில் ஏர்போட்ஸ் ப்ரோ 2-விலும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம், காது கேளாமையை கண்டறிந்து, பாரம்பரிய செவிப்புலன் கருவிகளை பிரதிபலிக்கும் வகையில் ஒலிகளை பெருக்கி பயனர்களுக்கு உதவும்.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய அம்சங்கள் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது, மேலும் அவை விரைவில் எஃப்.டி.ஏ ஒப்புதலை (FDA approval) பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, எஃப்.டி.ஏ ஒப்புதலை பெற்றால் மட்டுமே மருத்துவ தர செயல்பாட்டிற்கான அங்கீகாரம் ஆப்பிளுக்கு கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்ஸின் கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, இனிமேல் இந்த ஹெட்போன்ஸ் மிட்நைட், ப்ளூ, பர்பிள், ஆரஞ்சு மற்றும் ஸ்டார்லைட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இது $529 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆப்பிளின் புதிய ஏர்போட்ஸ் 4 இயர்பட்ஸை பொறுத்தவரை, இந்த மாடலின் ஹையர் வேரியண்ட் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல்லேஷன் (Active Noise Cancellation) அம்சத்துடன் வருகிறது. ஆப்பிளின் இட்ஸ் க்ளோடைம் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஏர்போட்ஸ் 4 வேரியண்ட்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு இதுதான்.

விலையை பொறுத்தவரை, ஏஎன்சி இல்லாத ஏர்போட்ஸ் 4 மாடல் ஆனது $129 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.11,000 க்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சல்லேஷன் அம்சத்துடன் வரும் ஹையர் வேரியண்ட் ஆனது $179 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.15,000 க்கு) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு வேரியண்ட்களின் முன்பதிவுகளுமே இன்று முதல் தொடங்குகின்றன. இவைகள் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Apple AirPods Pro to function as Clinical Grade Hearing Aid Gets Hearing Protection Test Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X