ரூ.80 லட்சம் விலையில் அறிமுகமான ஆப்பிள் ஹெட்போன்.! அப்படியென்ன சிறப்புகள் இதில்?

|

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான டிசைன், அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஆப்பிள் சாதனங்களை தயார் செய்வதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

கோல்டு பிளாக் வகைகளில்

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. அதன்படி இது கோல்டு வொயிட் மற்றும் கோல்டு பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த இரண்டு வகைகளும் 108,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.80 லட்சம் ஆகும்.

 கடந்த மாதம் துவகத்தில்

ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் துவகத்தில் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை 549 டாலர், அதாவது 59,900 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைவிட அதிக விலைக்கு நீங்கள் வாங்க விரும்பினால், இன்னொரு ஹெட்போன் விலை 108,000 டாலர், அதாவது 80 லட்சம் ரூபாய், இது தூய தங்கத்தால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி பயனர்கள் கவனத்திற்கு: புதிய அப்டேட்டால் உருவாகும் சிக்கல்.. பாதிக்கப்படும் பயனர்கள்.. உஷார்.!

க் ஏர்ஜோர்டான் ஷூக்கள்,

அதேபோல் பிரபலமான கேட்ஜெட்களின் ஆடம்பர வகைகளை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான கேவியர் தனது 2021 வரிசையை அறிவித்துள்ளது. இந்த வரிசையில் நைக் ஏர்ஜோர்டான் ஷூக்கள், சோனி பிஎஸ் 5 மற்றும் தூய தங்கத்தால் ஆன ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன் வகைகளும் உள்ளன.

விஞ்ஞானிகளை வியக்க வைத்த 57 ஆயிரம் ஆண்டு பழமையான ஓநாய் குட்டி கண்டுபிடிப்பு.. எங்கே தெரியுமா?

கைகளில் கோல்ட் ஓயிட் வேரியண்டிற்கு 750 தங்கம் மற்றும் வெள்ளை

அதன்படி இந்த இரண்டு வகைகளில் கோல்ட் ஓயிட் வேரியண்டிற்கு 750 தங்கம் மற்றும் வெள்ளை முதலை தோல் மற்றும் கோல்ட் பிளாக் வேரியண்டிற்கான கருப்பு முதலை தோல் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளன என கேவியல் கூறுகிறது.

இத்தனை மணிநேரமா இதை பார்த்திருக்காங்க: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் 2020 அறிக்கை!

 ஹெட்போனை

இருந்தபோதிலும் ஆப்பிள் இந்த ஹெட்போன்களின் விலை சற்று உயர்வாக இருப்பதால், எல்லோரும் வாங்க முடியாது. அதிக விலை ஒருபுறும் இருக்க, நிறுவனம் இந்த ஹெட்போன்களில் ஒன்றை மட்டுமே உருவாக்கியுள்ளது. எனவே இந்த ஆப்பிள் ஹெட்போனை வாங்க விரும்பினால் கேவியர் இணையதளத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple AirPods Max Sale: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X