Home
Gadgets

சும்மா கிழி.. ஓப்பன்-இயர் ANC, அடாப்டிவ் ஈகியூ, Live டிரான்ஸ்லேஷன்.. Apple AirPods 5 அறிமுகம்.. விலை என்ன?

ஆப்பிள் (Apple) நிறுவனமானது ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 (Apple AirPods 5) வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் இயர் டிசைனில்‌ ஆக்டிவ் நாய்ஸ் கேன்ஷலேஷன் கொண்ட மாடலாக களமிறங்கி இருக்கிறது. மேலும் அப்கிரேட் செய்யப்பட்ட அடாப்டிவ் ஈகியூ (Adaptive EQ), சிரி ஏஐ (Siri AI), லைவ் டிரான்ஸ்லேஷன் (Live Translation) உள்ளிட்ட பீச்சர்களும் இடம்பெற்றுள்ளன.

50 சதவீதத்துக்கும் அதிகமான நாய்ஸ் கேன்ஷலேஷன்: இந்த ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 மாடலின் முக்கிய சிறப்பம்சமாக ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 (Apple AirPods 4) மாடலுடன் ஒப்பிடும்போது, அவுட்டோர் நாய்ஸ் கன்ட்ரோலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 உள்ளது.

சும்மா கிழி.. ஓப்பன்-இயர் ANC, அடாப்டிவ் ஈகியூ, Live டிரான்ஸ்லேஷன்!

இதற்காக மல்டி போர்ட் அகஸ்டிக் ஆர்கிடெக்ச்சர் (Multiport Acoustic Architecture), அப்கிரேட் செய்யப்பட்ட கம்ப்யூடேஷனல் ஆடியோ அல்காரிதம் (Computational Audio Algorithms) பயன்படுத்தப்பட்டுள்ளன. பிளைட் டிராவலிங், ஆபீஸ் அல்லது அதிக நாய்ஸ் உள்ள இடங்களிலும் மியூசிக் கேட்கும்போது அவுட்டோர் நாய்ஸை வெகுவாக குறைத்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் டிரான்ஸ்பரன்ஸி மோட் (Transparency Mode) மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றி இருக்கும் மனித குரல் மற்றும் பிற தேவையான ஆடியோவை நேச்சுரலாக கேட்க முடியும். அடாப்டிவ் ஆடியோ (Adaptive Audio), ஏஎன்சி (ANC) மற்றும் டிரான்ஸ்பரன்ஸி மோட் ஆகியவை சூழ்நிலைக்கு ஏற்ப தானாக மாறிக்கொண்டு, அவுட்புட்டை கொடுக்கும்.

அப்கிரேட் செய்யப்பட்ட ஆடியோ குவாலிட்டி: நெக்ஸ்ட் ஜெனரேஷன் அடாப்டிவ் ஈகியூ (Adaptive EQ) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, பல்வேறு வகையான காதுகளின் வடிவத்திற்கு ஏற்ற வகையில் ரிச்சர் மற்றும் டீடெயில்டு சவுண்ட் (Detailed Sound) அனுபவத்தை இந்த ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 மாடலில் எதிர்பார்க்க முடியும்.

மேலும், பர்சனலைஸ்டு ஸ்பாஷியல் ஆடியோ (Personalized Spatial Audio) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஸ்டீரியோ ஆடியோ அனுபவத்தை பெற்று கொள்ளலாம். சிரி மற்றும் லைவ் டிரான்ஸ்லேஷன் (Siri AI & Live Translation) அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் இன்டலிஜென்ஸ் (Apple Intelligence) பீச்சர்களை இதில் பார்க்க முடிகிறது.

ஆப்பிள் இன்டலிஜென்ஸ் கொண்ட ஐபோன் மாடலுடன் இதை பயன்படுத்தும்போது, முழுமையான சிரி ஏஐ அணுகல்கள் மற்றும் ஹேண்ட்-ப்ரீ கன்ட்ரோல்கள் கிடைக்கும். மெசேஜ் அல்லது ஈமெயில்களில் இருக்கும் தகவல்களை கூட ஏர்பாட்ஸ் வழியாக கேட்டு கொள்ள முடியும். மேலும், லைவ் டிரான்ஸ்லேஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 மாடலானது, 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேசிக் ஏர்பாட்ஸ் 5 மாடலின் விலை 129 அமெரிக்கா டாலர்களாக இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் (Wireless Charging Case) கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் 5 மாடலின் விலை 149 அமெரிக்கா டாலர்களாக இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மாடலில் கூடுதல் பீச்சர்கள் உள்ளன.

அதாவது, ஸ்டெம்மில் (Stem) வால்யூம் ஸ்வைப் கன்ட்ரோல் (Volume Swipe Control) வழங்கப்பட்டுள்ளது. ஏஎன்சி ஆன் செய்யப்பட்டால், 5 மணி நேரம் பிளேபேக் கொடுக்கும். ஏஎன்சி ஆப் செய்யப்பட்டு இருந்தால், 22 மணி நேரங்களுக்கு பிளேப்க் கிடைக்கும். வயர்லெஸ் சார்ஜிங் கேஸ், ஆப்பிள் வாட்ச் சார்ஜர் மற்றும் கிஐ-சார்ஜரில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

யூஎஸ்பி-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய மார்கெட்டில் பேசிக் மாடலின் விலை ரூ.14,900ஆக இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மாடலின் விலை ரூ.17,900ஆக இருக்கிறது. ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர், ஈ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Apple AirPods 5 With Open‑ear Active Noise Cancellation Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X