ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்! விலை என்ன தெரியுமா?
ஆன்க்கர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆடியோ சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. தற்பொழுது ஆன்க்கர் நிறுவனம், ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் என்ற புதிய உறுப்பினரைத் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.

ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்
ஆன்க்கரிடமிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள், சுமார் 100 மணிநேர இசை பின்னணி நேரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் ஸ்மார்ட் AI தொழில்நுட்பம் மற்றும் ஆண்ட்ராய்டு ஏ.ஐ அசிஸ்டன்ட் உடன் வருகிறது.

92 மணிநேர பிளே டைம்
ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒரு முறை சார்ஜ் செய்தல் தொடர்ச்சியாக 8 மணிநேர பிளேபேக் அனுபவத்தைப் பயனருக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் சார்ஜிங் கேஸ் மூலம் கூடுதலாக 92 மணிநேர பிளே டைம் வரை பயனர்கள் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும்
ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், பயனர்கள் தொடர்ச்சியாக 2 மினிநேரம் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் ஸ்வெட் ஃப்ரூப் மற்றும் வாட்டர் ஃப்ரூப் கொண்ட IPX5 தரச்சான்று பெற்றது.

அமேசான் தளத்தில் இப்பொது விற்பனையில்
கிரிப் பிட் டிசைன், லீகுய்ட் சிலின் ஜெல் இயர்டிப்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியச் சந்தையில் ரூ.9,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிளாக் நிறத்தில் தற்பொழுது அமேசான் தளத்தில் ரூ.1,000 சலுகையுடன் ரூ.8,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications