ஆளுக்கு 2 ஆர்டர்.. ATM கார்டு சைஸில்.. ரூ.999 க்கு வயர்லெஸ் சார்ஜிங், USB-C ஆதரவுடன் 5000mAh பவர் பேங்க்!
ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) கொண்ட சார்ஜர்களை பாக்கெட்டிலேயே வைத்து கொண்டு சுற்றினாலும் கூட, கைவசம் ஒரு பவர் பேங்க் (Power Bank) இருந்தால்.. குறிப்பாக அது 100% சார்ஜ் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தால்.. அது நமக்கு கொடுக்கும் கான்ஃபிடென்ஸ் லெவலே வேற மாதிரி இருக்கும்.
ஆனால் பவர் பேங்குகளவு தூக்கிக்கொண்டு சுற்றுவதில் 2 முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. ஒன்று பவர் பேங்கின் அளவு. இரண்டாவது பவர் பேங்கையும் ஸ்மார்ட்போனையும் கனெக்ட் செய்ய உதவும் கேபிளையும் நாம் கையிலேயே வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டு சிக்கலுக்கும் விடுதலை கிடைத்தால் எப்படி இருக்கும்?

அதாவது ஒரு பவர் பேங்க் ஒரு ஏடிஎம் கார்டு அளவில் இருந்தால்.. கூடவே அது வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் வந்தால்.. இதெல்லாம் வெறும் ரூ.999 க்கு கிடைத்தால்.. யாரு விடுவா? ஆளுக்கு 2 ஆர்டர் போடத்தானே தோன்றும். அப்படியான ஒரு பவர் பேங்க் தான் - ஆங்கர் 322 மேக்சேஃப் 5000 எம்ஏஎச் பவர் பேங்க் (Anker 322 MagSafe 5000 mAh Power Bank).
நீங்கள் மிகவும் மலிவான விலையில் மேக்சேஃப் வயர்லெஸ் பவர் பேங்கை தேடுகிறீர்களானால், ஆங்கர் 322 மேக்சேஃப் 5000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது 200% உங்களுக்கானது தான். முதல் முறையாக, 5000 எம்ஏஎச் பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஆங்கர் 322 மேக்சேஃப் பவர் பேங் ஆனது இந்தியாவில் ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு முன்பாக இது இவ்வளவு மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதே இல்லை. இது வட அமெரிக்க சந்தைகளில் சுமார் $44 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.3710 க்கு வாங்க கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும் தற்போது இது ரூ.2500 க்கும் குறைவான விலைக்கு இந்தியாவில் வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஆங்கர் 322 மேக்சேஃப் 5000 எம்ஏஎச் பவர் பேங்க்கின் பெயர் குறிப்பிடுவது போலவே இது 5000mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது. இது ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் அதற்கு பிறகு வந்த ஐபோன் மாடல்களுக்கு இணக்கமானது. இந்த பவர் பேங்கை வைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களையும் கூட வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம் என்பதால், இந்த பவர் பேங்க்கை ஆண்ட்ராய்டு பயனர்களும் வாங்கலாம் .
இது 7.5W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 12W அதிகபட்ச அவுட்புட்டை (7.5W wireless charging and 12W max output) வழங்குகிறது. சுவாரசியமாக இது வயர்லெஸ் சார்ஜிங்கை மட்டுமின்றி, யூஎஸ்பி-சி வயர்டு சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இது யூஎஸ்பி-சி டூ யூஎஸ்பி-சி வயர் உடன் அனுப்பப்படுகிறது.
ஆங்கர் 322 மேக்னடிக் வயர்லெஸ் பவர் பேங்க்கின் வடிவமைப்பை பொறுத்தவரை, சார்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன் ஆனது நழுவுவதை தடுக்கும் வகையில்.. சிரமமில்லாத கேபிள்-ப்ரீ சார்ஜிங்கை (Cable-free Charging) உறுதி செய்யும் வகையில்.. வலிமையான மேக்னடிக் ஹோல்ட் (Magnetic Hold) உடன் வருகிறது.
இதில் இருக்கும் ஃபோல்டபிள் ஸ்டேண்ட் ஆனது உங்கள் ஸ்மார்ட்போனை வசதியான பார்வை கோணத்தில் வைத்திருக்கிறது; அதே சமயம் பக்கவாட்டில் உள்ள போர்ட் பாஸ்-த்ரூ சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது இந்த பவர் பேங்க் மற்றும் 2 டிவைஸ்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
இது தவிர்த்து பவர் பேங்க்கின் வெப்பநிலையை தொடர்ச்சியான கண்காணிப்பதற்கான பில்ட் - இன் NTC சென்சார்களும் இதில் உள்ளன. எல்லாவற்றை விட முக்கியமாக இது பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும்படியான மிகவும் வசதியான வடிவமைப்புடன் (ஒரு ஏடிஎம் கார்டு அளவில்) வருகிறது.
ஆங்கர் 322 மேக்சேஃப் 5000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது ஒயிட் மற்றும் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. ஆனால் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஒயிட் கலர் ஆப்ஷன் ஆனது ரூ.1099க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளாக் கலர் ஆப்ஷன் ரூ.999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது பிளாக் கலரை விட ஒயிட் கலர் ஆப்ஷன் ரூ.100 விலை அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








