ஆண்ட்ராய்ட் வியர் 2.0 புதிய வெர்ஷன் காலதாமதம் ஆவது ஏன்?

ஆண்ட்ராய்ட் வியர் 2.0 புதிய வெர்ஷன் காலதாமதம் ஆவது ஏன்?

By Siva
|

கடந்த ஆண்டே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ராய்ட் வியர் 2.0 வாட்ச் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதன் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷன் மிக விரைவில் வெளியாகும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆண்ட்ராய்ட் வியர் 2.0 புதிய வெர்ஷன் காலதாமதம் ஆவது ஏன்?

ஆனால் எதிர்பாராத வகையில் இரண்டாவது வெர்ஷன் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய வெர்ஷனை சோதனை செய்யும் போது அதில் சில தவறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதே இந்த காலதாமதத்திற்கு காரணம் என்றும் கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

எந்த ஒரு தயாரிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு குறைகள் இன்றி சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் கூகுள் நிறுவனம் இருப்பதால் தனது தயாரிப்புகளை பலமுறை சோதனைக்கு உட்படுத்திய பின்னரே மார்க்கெட்டிற்குள் நுழைய அனுமதிக்கும்.

வெறும் ரூ.26/-க்கு பிஎஸ்என்எல் அன்லிமிடெட் அதிரடி.!

அந்த வகையில் சோதனை செய்தபோது கண்டிபிடிக்கப்பட்ட குறையை தற்போது சரிசெய்யும் பணியில் கூகுள் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இருப்பினும் மற்ற வியர் வாட்ச்களான எல்ஜி வாட்ச் ஸ்டைல், வாட்ச் ஸ்பாட் மற்றும் ஆண்ட்ராய்டு வியர் 2.0 ஆகியவை சந்தையில் நல்ல வரவேற்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி நிறுவனம் இந்த வியர் வாட்ச்களை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த வியர் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றதை போல் அப்டேட் ஆண்ட்ராய்டு 2.0 வெர்ஷனில் கண்டுபிடிக்கப்பட்ட குறைகள் சரிசெய்யப்பட்டு வெகு விரைவில் சந்தைக்கு வெளிவரும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும் எப்போது குறைகள் சரிசெய்யப்படும் என்றும், புதிய அப்டேட் வெர்ஷன் எப்போது வெளியிடப்படும் போன்ற தகவல்களை கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. முன்னதாக இந்த அப்டேட் வெர்ஷனை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட கூகுள் திட்டமிட்டிருந்தது என்பது தெரிந்ததே.

மேலும் ஆண்ட்ராய்ட் 2.0 அப்டேட் வெர்ஷனில் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். கூகுள் அசிஸ்டெண்ட், ஆண்ட்ராய்ட் பே சப்போர்ட், கூகுள் ப்ளே ஸ்டோர் உள்பட பல புதிய வசதிகள் இதில் இணணக்கப்பட்டுள்ளதாக தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன

இவ்வளவு சிறப்பு அம்சங்கள் பொருந்திய ஆண்ட்ராய்ட் வியர் 2.0 அப்டேட் வெர்ஷன் வெகுவிரைவில் நம் கைகளில் தவழும் என்று எதிர்பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Google has recently said that the Android Wear 2.0 rollout was delayed due to a bug.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X