Ambrane மேட் இன் இந்தியா பவர்லிட் பவர் பேங்க் அறிமுகம்! அதிக பவர், குட்டி சைஸ்; விலையோ குறைவு!

|

அம்பிரேன் (Ambrane) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அம்பிரேன் பவர்லிட் எக்ஸ்எல் என்ற 20,000 எம்ஏஎச் கொண்ட பவர் பேங்க் மாடலையும், அம்பிரேன் பவர்லிட் புரோ என்ற 10,000 எம்ஏஎச் கொண்ட மேட் இன் இந்தியா பவர் பேங்க் சாதனங்களை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மேட் இன் இந்தியா பவர் பேங்க்களின் விலை மற்றும் இதன் சிறப்பம்சத்தை விரிவாகப் பார்க்கலாம்.

பவர்லிட் சீரிஸ் பவர் பேங்க்

பவர்லிட் சீரிஸ் பவர் பேங்க்

பவர்லிட் சீரிஸ் என்ற பெயரின் கீழ் அம்பிரேன் நிறுவனம் இந்த இரண்டு பவர் பேங்க் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு புதிய பவர் பேங்க் சாதனங்களும் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பவர் டெலிவரி தொழில்நுட்பத்துடன் வருகின்றது.

சூப்பர் ஸ்லிம் மற்றும் காம்பாக்ட்

சூப்பர் ஸ்லிம் மற்றும் காம்பாக்ட்

இவை இரண்டும் சூப்பர் ஸ்லிம் மற்றும் காம்பாக்ட் வடிவமைப்பில் பக்குவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிக சக்தி கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை லி-அயன் (Li-ion) பேட்டரிகளை விடச் சிறந்தது.இந்த புதிய பவர் பேங்க் சாதனங்களின் மிக சிறந்த அம்சமாக இதன் பி.டி(PD) தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது.

இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ் உண்மையா? இவர்களுக்கு மட்டும் நிச்சயம் இ-பாஸ் கிடையாது!இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ் உண்மையா? இவர்களுக்கு மட்டும் நிச்சயம் இ-பாஸ் கிடையாது!

பி.டி தொழில்நுட்பம்

பி.டி தொழில்நுட்பம்

இந்த பி.டி தொழில்நுட்பம் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு தேவையான அழுத்தத்திற்கு ஏற்றார் போலக் கணித்து சார்ஜிங் வேகத்தைத் துல்லியமாக மாற்றி அமைத்து சார்ஜிங் செய்கின்றன. சரியாகச் சொன்னால் பவர் பேங்க் உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைத் தானாகவே கண்டறிந்து, சாதனத்தின் தேவைக்கேற்ப, உகந்த மற்றும் விரைவான சார்ஜிங்கிற்கு தேவையான துல்லியமான சக்தியை வழங்குகிறது.

0% முதல் 50% வரை 30 நிமிடம் மட்டுமே

0% முதல் 50% வரை 30 நிமிடம் மட்டுமே

இது 30 நிமிடங்களில் 0% முதல் 50% வரை ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்கிறது. சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க போர்ட்டபிள் பவர் பேங்க் 9 அடுக்கு சர்க்யூட் சிப் பாதுகாப்பையும் இந்த பவர் பேங்க் சாதனங்கள் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பிரேன் பவர்லிட் எக்ஸ்எல் மாடல் பவர் பேங்க் சாதனம் (20000 எம்ஏஎச்) டிரிபிள் சார்ஜிங் போர்டுடன் வருகிறது, இதில் 2 யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் 1 டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Google Pay பயனர்கள் உஷார்! ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி- இதை மட்டும் செய்யாதீங்க!Google Pay பயனர்கள் உஷார்! ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி- இதை மட்டும் செய்யாதீங்க!

எல்.ஈ.டி இண்டிகேட்டர்

எல்.ஈ.டி இண்டிகேட்டர்

அதேபோல், அம்பிரேன் பவர்லிட் ப்ரோ பவர் பேங்க் சாதனம் (10000 எம்ஏஎச்) இரட்டை போர்ட்டுகளுடன் வருகிறது, இதில் 1 யூ.எஸ்.பி போர்ட் மற்றும் 1 டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. யூ.எஸ்.பி போர்ட்கள் 22.5W ப்ளேஸிங் பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் உடன் டைப்-சி போர்ட் 18W டூ-வே சார்ஜிங் (பவர் டெலிவரி தொழில்நுட்பம்) போர்ட் உடன் வருகிறது. இது பவர் பேங்க்கை சார்ஜ் செய்யவும், பவர் பேங்க் சாதனத்திலிருந்து சார்ஜ் செய்யவும் அனுமதிக்கிறது. இரண்டு சாதனங்களும், எல்.ஈ.டி இண்டிகேட்டருடன் வந்துள்ளது.

விலை

விலை

அம்பிரேன் பவர்லிட் எக்ஸ்எல் பவர்பேங்க் மெட்டாலிக் கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் வருகிறது மற்றும் இதன் விலை ரூ .1499 ஆகும். அதேபோல், அம்பிரேன் பவர்லிட் புரோ பவர் பேங்க் மெட்டாலிக் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகிறது மற்றும் இதன் விலை வெறும் ரூ .999 ஆகும். இந்த இரண்டு தயாரிப்புகளும் 180 நாட்கள் உத்தரவாதத்துடன் கூடிய பிரத்தியேகமான சலுகையுடன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Ambrane Powerlit XL and Powerlit PRO Made In India Power Banks Launched Know The Price And Other Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X