Home
Gadgets

365 நாட்கள் வாரண்டி: அம்ப்ரேன் டாட்ஸ் 38, நியோபட்ஸ் 33 இயர்பட்ஸ் அறிமுகம்- இதோ விலை?

அம்ப்ரேன் டாட்ஸ் 38 மற்றும் நியோபட்ஸ் 33 டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் 365 நாட்கள் வாரண்டியுடன் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மூலமாக விற்பனைக்கு கிடைக்கிறது.

365 நாட்கள் வாரண்டி:அம்ப்ரேன் டாட்ஸ்38, நியோபட்ஸ்33 இயர்பட்ஸ் அறிமுகம்

அம்ப்ரேன் தனது டிடபிள்யூஎஸ் கீழ் தொடர்ந்து இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி இந்தியாவில் டாட்ஸ் 38 மற்றும் நியோபட்ஸ் 33 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டாட்ஸ் 38 மாடல் விலை ரூ.2,499 ஆகவும், நியோபட்ஸ் 33 விலை ரூ.1,799 ஆகவும் அறிவிக்கப்பட்டது. தயாரிப்புகளுக்கு 365 நாட்கள் வரை வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான், பிளிப்கார்ட் மூலமாக வாங்கக் கிடைக்கிறது.

டிடபிள்யூஎஸ் இரண்டும் ஐபிஎக்ஸ்4 மாடல்களானது வியர்வை மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு அம்சங்களோடு வருகிறது. டாட்ஸ் 38 டடபிள்யூஎஸ் 16 மணிநேர பிளேபேக் ஆதரவோடு வருகிறது. இந்த இயர்பட்ஸ் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. பல்வேறு அம்சங்களோடு இந்த இயர்பட்ஸ் கிடைக்கிறது.

365 நாட்கள் வாரண்டி:அம்ப்ரேன் டாட்ஸ்38, நியோபட்ஸ்33 இயர்பட்ஸ் அறிமுகம்

நியோபட்ஸ் 33 ஆனது டிடபிள்யூஎஸ் தொடரின் கீழ் வருகிறு. ஆழ்ந்த பேஸ் மற்றும் மேம்பட்ட ஆடியோ டிரைவர்களுடன் வருகிறது. ஆடியோ இசை அனுபவத்திற்கு வளப்படுத்த பேஸ் ரிச் அம்சங்களோடு வருகிறது. நியோபட்ஸ் 33 பல வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக், வெள்ளை மற்றும் இண்டிகோ ப்ளூ போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் 15 மணிநேர பிளேபேக் அம்சத்தோடு வருகிறது. டாட்ஸ் 38 மற்றும் நியோபட்ஸ் 33 இரண்டும் ப்ளூடூத் வி5.0, வயர்லெஸ் வரம்பு, வாஸ்ட் அசிஸ்டெண்ட் ஆதரவோடு வருகிறது. டச் இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. இதில் எளிதான டச் ஆதரவு இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் ஹெட்ஃபோன்கள், நெக் பேண்ட்ஸ் மற்றும் ட்ரூ வயர்லெஸ் உள்ளிட்ட ஆடியோ வரம்பில் அதிக தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அம்ப்ரேன் அறிமுகப்படுத்திய டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இரண்டும் 360 டிகிரி செயல்திறனையும் நீண்ட பேட்டரி ஆயுளையும் கொண்டுள்ளது. டாட்ஸ் 20 மாடல் பிளாக் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வருகிறது. டாட்ஸ் 11 பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

365 நாட்கள் வாரண்டி:அம்ப்ரேன் டாட்ஸ்38, நியோபட்ஸ்33 இயர்பட்ஸ் அறிமுகம்

அம்ப்ரேன் டாட்ஸ் 20 சுற்றுச்சூழல் நாய்ஸ் ரத்து அம்சத்துடன் வருகிறது. இதில் ஆடியோ மேம்பாடு மற்றும் பின்புற சுற்றுப்புற சத்தத்தை குறைக்கும் அம்சத்தை கொண்டுள்ளது. இது 10மிமீ டிரைவர்கள், மேம்பட்ட ஒலி ஆதரவு, சிறந்த சத்தம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இதில் சிறந்த பேட்டரி அம்சம் இருப்பதால் 25 மணிநேர பிளேபேக் ஆதரவை கொண்டுள்ளது. இது நீண்ட உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு அணுகலை நீண்ட ஆயுளுடன் வழங்குகிறது. டாட்ஸ் 11 மேட் பூச்சு ஆதரவுடனும், சக்திவாய்ந்த பேஸ் மற்றும் இனிமை வாய்ந்த மிருதுவான அம்சத்தோடு வருகிறது. இயர்பட்ஸ் 20 20மணிநேர பிளேக் பேக் ஆதரவை கொண்டுள்ளது. ஹைபேஸ் அம்சம் இதில் கூடுதல் ஆதரவாகும்.

அம்ப்ரேன் அறிமுகம் செய்துள்ள இரண்டு தயாரிப்புகளும் வலுவான இணைப்பு ஆதவுகளை பெற்றுள்ளது. ப்ளூடூத் 5.0, கூகுள் அசிஸ்டென்ட், சிரி ஆகிய அணுகலும் இருக்கிறது. இரண்டு மாடல்களும் வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சத்தோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Ambrane Launched its Dots 38, NeoBuds 33 TWS Earbuds in India: Price, Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X