அம்பிரேன் டாட்ஸ் 11, டாட்ஸ் 20 இயர்பட்ஸ் அறிமுகம்: அம்சங்கள், விலை இதோ!

|

அம்ப்ரேன் இன்று டிடபிள்யூஎஸ் சீரிஸ் ஆன டாட்ஸ் 11 மற்றும் டாட்ஸ் 20 இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.2,999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய தளங்களில் இந்த இயர்பட்ஸ் கிடைக்கிறது. இந்த தயாரிப்புகள் 365 நாட்கள் உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.

அம்பிரேன் டாட்ஸ் 11, டாட்ஸ் 20 இயர்பட்ஸ் அறிமுகம்: அம்சங்கள், விலை இதோ

மேலும் அடுத்த மாதம் டாட்ஸ் 38ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் டிடபிள்யூஎஸ் டாட்ஸ் தொடரை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் 365 நாட்கள் உத்தரவாதத்துடன் வருகிறது.

அம்ப்ரேன் அறிமுகப்படுத்திய டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இரண்டும் 360 டிகிரி செயல்திறனையும் நீண்ட பேட்டரி ஆயுளையும் கொண்டுள்ளது. டாட்ஸ் 20 மாடல் பிளாக் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வருகிறது. டாட்ஸ் 11 பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

அம்ப்ரேன் டாட்ஸ் 20 சுற்றுச்சூழல் நாய்ஸ் ரத்து அம்சத்துடன் வருகிறது. இதில் ஆடியோ மேம்பாடு மற்றும் பின்புற சுற்றுப்புற சத்தத்தை குறைக்கும் அம்சத்தை கொண்டுள்ளது. இது 10மிமீ டிரைவர்கள், மேம்பட்ட ஒலி ஆதரவு, சிறந்த சத்தம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இதில் சிறந்த பேட்டரி அம்சம் இருப்பதால் 25 மணிநேர பிளேபேக் ஆதரவை கொண்டுள்ளது. இது நீண்ட உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு அணுகலை நீண்ட ஆயுளுடன் வழங்குகிறது. டாட்ஸ் 11 மேட் பூச்சு ஆதரவுடனும், சக்திவாய்ந்த பேஸ் மற்றும் இனிமை வாய்ந்த மிருதுவான அம்சத்தோடு வருகிறது. இயர்பட்ஸ் 20 20மணிநேர பிளேக் பேக் ஆதரவை கொண்டுள்ளது. ஹைபேஸ் அம்சம் இதில் கூடுதல் ஆதரவாகும்.

அம்ப்ரேன் அறிமுகம் செய்துள்ள இரண்டு தயாரிப்புகளும் வலுவான இணைப்பு ஆதவுகளை பெற்றுள்ளது. ப்ளூடூத் 5.0, கூகுள் அசிஸ்டென்ட், சிரி ஆகிய அணுகலும் இருக்கிறது. இரண்டு மாடல்களும் வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சத்தோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ambrane Launched its Dots 11, Dots 20 Earbuds in India: Price, Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X