பார்க்கலாம், கேட்கலாம், பேசலாம்: கம்மி விலையில் அறிமுகமான Ambrane Glares ஸ்மார்ட் கிளாஸ்!

|

உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள், 7 மணிநேர பேட்டரி ஆயுள் உடன் இந்தியாவில் Ambrane Glares அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆம்பிரேன் க்ளேர்ஸ் ஆனது சதுர மற்றும் வட்ட லென்ஸ் வடிவங்களிலும், ஹால் ஸ்விட்ச் ஆதரவுடனும் வெளியாகி இருக்கிறது.

இந்திய தயாரிப்பில் வெளியான முதல் ஸ்மார்ட் கிளாஸ் ஆக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் கிளாஸ் இல் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது.

முதல் ஸ்மார்ட் கிளாஸ் இதுதான்

முதல் ஸ்மார்ட் கிளாஸ் இதுதான்

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் கிளாஸ் ஆக ஆம்பிரேன் க்ளேர்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது open-ear audio glass ஆக வெளியாகி இருக்கிறது. கிளாஸ் ஃப்ரேமில் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் கிளாஸ்களில் ப்ளூடூத் v5.1, சுற்றுப்புற ஒளிக்கு ஏற்ற தன்மை கொண்ட லென்ஸ்கள், ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் உள்ளது.

7 மணி நேரம் பேட்டரி ஆயுள்

7 மணி நேரம் பேட்டரி ஆயுள்

இந்திய நிறுவனம் தரப்பில் முதல் ஸ்மார்ட் கிளாஸ் ஆக இது வெளியாகி உள்ள இதில் பல்வேறு அம்சங்கள் நிரம்பி இருக்கிறது.

இரண்டு மணிநேரம் சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் பேட்டரி ஆயுள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட்ட மற்றும் சதுர வடிவ லென்ஸ்களை கொண்டிருக்கும் இந்த கண்ணாடியில் UV பாதுகாப்பு ஆதரவும் இருக்கிறது.

Ambrane Glares விலை

Ambrane Glares விலை

Ambrane Glares இன் இந்திய விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.9,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிறுவனத்தின் இணையதளம் மூலமாக ரூ.4999 என இந்த ஸ்மார்ட் கிளாஸை பிளாக் வண்ண விருப்பத்தில் வாங்கலாம்.

அதாவதுAmbrane Glares இணையதளத்தில் இந்த ஸ்மார்ட் கிளாஸ்-க்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆம்பிரேன் க்ளேர்ஸ் சிறப்பம்சங்கள்

ஆம்பிரேன் க்ளேர்ஸ் சிறப்பம்சங்கள்

ஆம்பிரேன் க்ளேர்ஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் காது பேட்-க்கு மேலே டச் கட்டுப்பாடுகளுக்கான ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த கிளாஸ் இல் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் உள்ளது. இதில் மைக்ரோஃபோனும் பொருத்தப்பட்டுள்ளன. இது HD சரவுண்ட் ஒலியை கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டச் பேட் ஆதரவு

டச் பேட் ஆதரவு

இந்த ஸ்மார்ட் கிளாஸ் இன் டச் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி பயனர்கள் அழைப்புகளை ஏற்கவும் நிராகரிக்கவும் முடியும். அதோடு மியூசிக் ப்ளே பேக் கட்டுப்பாட்டையும் டச் பேட் இல் அணுகலாம்.

ஸ்மார்ட் கிளாஸ் இல் வாய்ஸ் அசிடென்ட் அணுகலும் இருக்கிறது. Ambrane Glares கிளாஸ் இல் ப்ளூடூத் v5.1 இணைப்பு ஆதரவு இருக்கிறது.

இந்த கிளாஸை iOS மற்றும் Android சாதனங்களுடன் இணைக்கலாம்.

99.99 சதவீதம் பாதுகாப்பு

99.99 சதவீதம் பாதுகாப்பு

முன்னதாக குறிப்பிட்டுள்ளபடி, கிளாஸ்கள் வட்ட மற்றும் சதுர வடிவ லென்ஸ்களை கொண்டிருக்கிறது.

இது வெளிப்புற ஒளிக்கு ஏற்ப செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் டிஸ்ப்ளேவில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட்டை குறைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

டூ-லென்ஸ் விருப்பம் இருக்கிறது. அதாவது இதனுடன் இரண்டு லென்ஸ்கள் வழங்கப்படுகிறது, சுற்றுப்புறங்களுக்கு ஏற்ப லென்ஸ்களை மாற்றிக் கொள்ளலாம்.

ஆம்பிரேன் க்ளேர்ஸ் UV400 சான்றை பெற்றிருக்கிறது. இந்த கிளாஸ் UV கதிர்கள் மற்றும் பிற கதிர்வீச்சிலிருந்து 99.99 சதவீதம் கண்களை பாதுகாக்கிறது.

இரண்டு மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும்

இரண்டு மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும்

ஆம்பிரேன் தகவலின்படி, இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் நீர் எதிர்ப்பிற்கான IPX4 மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. இதன்மூலம் வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு தன்மையை இந்த கிளாஸ் கொண்டிருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கிளாஸ் இரண்டு மணிநேரம் சார்ஜ் செய்தால் 7 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய தயாரிப்பு ஸ்மார்ட் கிளாஸ்

இந்திய தயாரிப்பு ஸ்மார்ட் கிளாஸ்

இந்திய தயாரிப்பில் வெளியான முதல் ஸ்மார்ட் கிளாஸ் இது. பிற ஸ்மார்ட் கிளாஸ் உடன் ஒப்பிடும் போது அடிப்படை அம்சங்கள் மட்டுமே இதில் இருக்கிறது என்றாலும் இதன் விலை நியாயமானதாக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் கிளாஸ் இல் உள்ள ஸ்பீக்கர்கள் உங்கள் அழைப்புகளை எடுத்து பேச உதவுகிறது. அதேபோல் இதில் எச்டி மைக்ரோபோன் இடம்பெற்றுள்ளது. நீங்கள் பயணத்தில் இருக்கும் போதும் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் அழைப்புகளை எடுத்து பேசலாம். தெளிவான குரல் வெளியீடு இதில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Ambrane Glares Launched at Budget Price: First Smart Glass From Indian company

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X