அடிச்சி தூக்கும் ஆர்டர்.. ஆஃபரில் ரூ.1,599 பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. BT காலிங்.. 250mAh பேட்டரி!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) அமோலெட் டிஸ்பிளே, கர்வ்ட் கிளாஸ், ஹெல்த் மானிட்டர் மற்றும் டிராக்கிங், 250mAh பேட்டரி போன்ற பட்டாசான அம்சங்களை கொண்ட ஆம்பிரேன் ஃபியர் (Ambrane Fyre) ஸ்மார்ட்வாட்ச் டிஸ்கவுண்டில் கிடைக்கிறது.
ஆம்பிரேன் ஃபியர் அம்சங்கள் (Ambrane Fyre Specifications): இந்த ஆம்பிரேன் ஸ்மார்ட்வாட்ச் 2.04 இன்ச் (368 × 448 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது.

இதுவொரு ஆல்வேஸ்-ஆன்-டிஸ்பிளே (Always-On-Display) மாடலாகும். 2.5 டி கர்வ்ட் கிளாஸ் (2.5D Curved Glass) மற்றும் மல்டி-கலர் ஸ்ட்ராப் (Multi Color Strap) ஆப்சன் கொண்டுள்ளது. இந்த ஆம்பிரேன் ஃபியர் ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதற்காக இன்பில்ட் மைக் (Inbuilt Mic), ஸ்பீக்கர்கள் (Speakers) மற்றும் டயல் பேட் (Dial Pad) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச்சில் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் காலிங் அனுபவத்துக்காக ப்ளூடூத் வி5.2 (Bluetooth: v5.2) கனெக்டிவிட்டி வருகிறது. ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) உள்ளன. இதில் ஹெல்த் மானிட்டரிங் (Health Monitoring) மற்றும் ஹெல்த் டிராக்கிங் (Health Tracking) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor) மற்றும் மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் (Menstrual Cycle Tracking), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ப்ரீத் டிராக்கிங் (Breath Tracking) உள்ளிட்டவை வருகின்றன.
லேப்டாப் (Laptop), டேப்லெட் (Tablet), ஸ்மார்ட்போன் (Smartphone) போன்ற டிவைஸ்களில் நொடியில் கனெக்ட் செய்ய ஏதுவாக யுனிபேர் டெக்னாலஜி (UniPair Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சில் செடண்டரி அலர்ட் (Sedentary Alert), வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm), டைமர் (Timer) மற்றும் ஃபைண்ட் போன் (Find Phone) போன்ற ஸ்மார்ட் பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Camera and Music Control), வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistance) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மெசேஜ் நோட்டிபிகேஷன் (Messages Notifications) சப்போர்ட்டும் வருகிறது. 100+ கஸ்டம் வாட்ச் பேஸ்கள் (Custom Watch Faces) வருகின்றன. இந்த வாட்ச்சில் 250mAh பேட்டரி கேபாசிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் பிடிக்கும். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 5 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கும். IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு மேட் இன் இந்தியா (Made in India) தயாரிப்பாகும். இதற்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.
இந்த ஆம்பிரேன் ஃபியர் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் (Black), ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold), டீப் ஒயின் (Deep Wine) மற்றும் கிராஃபைட் (Graphite) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த வாட்ச்சின் விலை ரூ.1,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது, அறிமுக சலுகையில் வெறும் ரூ.1,599க்கு கிடைக்கிறது.
இதனை பிளிப்கார்ட் பில் பில்லியன் விற்பனையிலும் (Flipkart Big Billion Days Sale), ஆம்பிரேன் வெப்சைட்டிலும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள முடியும். இந்த விலை விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் லுக், நல்ல பேட்டரி பேக்கப், ஹெல்த் மானிட்டர்கள் வேண்டுமானால், இது சிறந்த தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








