அசத்தலான "அம்பரனே ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20".! பட்ஜெட் விலையில்.!
அம்பரனே நிறுவனம் தனது புதிய "ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20(Smart Band AFB -20)" இன் விற்பனையை இந்திய சந்தையில் தவங்கியுள்ளது.
அம்பரனே நிறுவனம் தனது புதிய "ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20(Smart Band AFB -20)" இன் விற்பனையை இந்திய சந்தையில் தவங்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட் பேண்ட் பெரிய சதுர ஓ.எல்.இ.டி டிஸ்பிளேயுடன் அகலமான சிலிக்கான் பேண்ட்டுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் பயனரின் உடலில் உள்ள கலோரி, நடை தூரம், படிக்கட்டுகள் ஏறிய எண்ணிக்கை போன்ற அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்து பயனருக்கு வழங்குகிறது.
உங்களின் தினசரி வாழ்க்கை முறைகளைக் கணக்கிட்டு, சரியான நேரத்தில் உங்களுக்குத் தேவையான தகவல்களையும், உங்களின் தூண்டுதலுக்காகவும் செய்திகள் மிகத் துல்லியமாக அனுப்பிக்கிறது.
கூடுதல் சிறப்பாக இந்த ஸ்மார்ட் பேண்ட் உங்களின் தூக்கம் மற்றும் உங்களின் இதயத் துடிப்பை கணக்கிடுகிறது. இத்துடன் உங்கள் மொபைல் உடன் எளிதில் இணைந்து உங்களுக்கு வரும் வாய்ஸ் கால்ஸ், வாட்ஸ் ஆப் செய்தி, பேஸ்புக் நோட்டிபிகேஷன் அனைத்தையும் வைப்ரஷன் மூலம் உங்களை அலர்ட் செய்கிறது.

இந்த அம்பரனே ஸ்மார்ட் பேண்ட் 45 எம்.ஏ.எச் உடன் வருகின்றது ஸ்டான் பை மோடில் நாட்கள் நிலைத்து உழைக்கும் பேட்டரி சேவையைப் பயனருக்கு வழங்குகிறது. கூடுதலாக ஆன்டி தேப்ட் அலெர்ட் சேவை, ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்சி கால்ஸ் அலெர்ட் போன்ற சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.
அம்பரனே ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20, அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப் டீல், ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற அனைத்து முன்னணி வலைத்தளங்களிலும் வெறும் ரூ.1,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications