இந்தியா: ரூ.29,999 விலையில் 50-இன்ச் ஸமார்ட் டிவி அறிமுகம்.!

|

அமேசான் நிறுவனம் இந்தியாவில் புதிதாக அமேசான்பேசிக் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இவை 50-இன்ச், 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என இருவித அளவுகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்டிரீம் செய்ய முடியும்

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளிலும் அமேசான் பயர் ஒஎஸ், 20 வாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், அலெக்சா வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் வாய்ஸ் ரிமோட் கொண்டு அலெக்சா மூலம் நிகழ்ச்சிகளை கேட்டு ஸ்டிரீம் செய்ய முடியும்.

யர் ஒஎஸ் கொண்டு பிரைம் வீடி

அதேபோல் பயர் ஒஎஸ் கொண்டு பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், சோனிலிவ், வூட், டிஸ்கவரி பிளஸ் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்டி டிஸ்பிளே மற்

அமேசான்பேசிக் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அல்ட்ரா ஹெச்டி டிஸ்பிளே மற்றும் 3840x2160 பிக்சல் தீர்மானம் ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் எச்டிஆர் ஆதரவு மற்றும் டால்பி விஷன் ஆதரவுகள் உள்ளது. அதேபோல் இந்த சாதனங்களின் டிஸ்பிளேவில் 60hz refresh rate மற்றும் 178 degrees viewing angles வசதிகளும்உள்ளது.

 பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களின் மென்பொருள் அமைப்புகளைப் பற்

அமேசான்பேசிக் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களின் மென்பொருள் அமைப்புகளைப் பற்றி பேசுகையில், 1.9ஜிகாஹெர்ட்ஸ் குவாட-கோர் Amlogic 9th Generation Imaging Engine வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள். பின்பு பயர் ஒஎஸ் இவற்றுள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ள், யூ.எஸ்.பி 3.0 போர்ட், யூ.எஸ்.பி 2.0 போர்ட், மூன்று எச்.டி.எம்.ஐ 2.

இணைப்பிற்காக, செட்-டாப் பாக்ஸ், ப்ளூ ரே பிளேயர்கள், கேமிங் கன்சோல்கள், யூ.எஸ்.பி 3.0 போர்ட், யூ.எஸ்.பி 2.0 போர்ட், மூன்று எச்.டி.எம்.ஐ 2.0 போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அமேசான் தளத்

மேலும் அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் 50-இன்ச் மாடல் விலை ரூ.29,999 என்றும் 55-இன்ச் மாடல் விலை ரூ.34,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக இவற்றின் விற்பனை ஏற்கனவே அமேசான் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. பின்பு விரைவில் இதன் 43-இன்ச் 4கே, 43-இன்ச் ஃபுல் ஹெச்டி, 32-இன்ச் ஹெச்டி ரெடி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அமேசான் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
AmazonBasics Fire TV Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X