அமேசான் காதலர் தின ஸ்பெஷல் ஆஃபர்.. 4K சப்போர்ட், 150 இன்ச்.. கம்மி விலையில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது valentine's day sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் 4கே சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 (ZEBRONICS PIXAPLAY 67) ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலுக்கு 69 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 அம்சங்கள் (ZEBRONICS PIXAPLAY 67 Specifications): 1080p நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 4K சப்போர்ட் ஆதரவும் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலில் உள்ளது. எனவே இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் இந்த சாதனத்தில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது
அதுவும் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலில் 8000 லூமென்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலானது 150 இன்ச் புரொஜெக்சன் சைஸ் கொடுக்கிறது. ஆகவே 100 இன்ச் டிவி மாடலை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்.
ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (auto keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பல்வேறு ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த பிக்ஸாபிளே 67 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு 200 டிகிரி டில்ட் (200° tilt) ஆதரவு கொடுக்கிறது இந்த சாதனம்.

பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், ஆடியோ ஜாக், ஆர்45 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
BT ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








