Home
Gadgets

காதலர் தினத்துக்கு அள்ளி தரும் அமேசான்.. 300 இன்ச்.. 4K சப்போர்ட்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் valentine's day sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டிவி மற்றும் ப்ரொஜெக்டர் மாடல்கள் 65 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் Wzatco நிறுவனத்தின் 4கே ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் Wzatco யுவா வைப் (Wzatco Yuva Vibe) மாடலுக்கு 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,980 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

காதலர் தினத்துக்கு அள்ளி தரும் அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்!

Wzatco யுவா வைப் அம்சங்கள் (Wzatco Yuva Vibe Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடல். எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். அதுவும் தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் Wzatco யுவா வைப் மாடல்.

14000 லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. எனவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா வைப் மாடல் வெளிவந்துள்ளது. Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது Wzatco யுவா வைப் மாடல் பெரிய திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), 4 பாயிண்ட் கரெக்சன் உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

காதலர் தினத்துக்கு அள்ளி தரும் அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்!

சாட்ஜிபிடி (ChatGPT) ஆதரவும் இந்த Wzatco யுவா வைப் மாடலில் உள்ளது. அதேபோல் Wzatco யுவா வைப் மாடலில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பின்பு மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த Wzatco யுவா வைப் மாடலில் உள்ளன.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. ஸ்கிரீன் மிரர்ரிங் ( Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. அனைத்து சிறப்பான வசதிகளும் இந்த Wzatco யுவா வைப் மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Valentines Day Sale: Wzatco Yuva Vibe Projector is available at 52 percent discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X