காதலர் தின சர்ப்ரைஸ்.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. 4K ப்ரொஜெக்டர் மாடலுக்கு விலை குறைப்பு..
அமேசான் தளத்தில் இப்போது valentine's day sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 4கே சப்போர்ட் இ கேட் டஸ்டர் 8எக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இது ஃபுல் ஆட்டோமேட்டிக் ப்ரொஜெக்டர் ஆகும். இப்போது இந்த மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
முன்பு இ கேட் டஸ்டர் 8எக்ஸ் மாடல் ரூ.33,000 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் விலை குறைக்கப்பட்டு ரூ.19,980 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்க முடியும்.

இ கேட் டஸ்டர் 8எக்ஸ் அம்சங்கள் (E Gate Duster 8X Specifications): இ கேட் டஸ்டர் 8எக்ஸ் மாடல் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மேலும் இதில் எச்டிஆர் பிளஸ் (HDR +) மற்றும் எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
800 ட்ரு ஐஎஸ்ஒ லுமன்ஸ் (800 True ISO Lumens) பிரைட்னஸ் வசதியுடன் இ கேட் டஸ்டர் 8எக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் 60000 மணி நேர லேம்ப் லைஃப் (60000 Hours Lamp Life) வழங்குகிறது இந்த ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த இ கேட் டஸ்டர் 8எக்ஸ் ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.
குவாட் கோர் பிராஸசர் உடன் இ கேட் டஸ்டர் 8எக்ஸ் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது. அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த இ கேட் டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இ கேட் டஸ்டர் 8எக்ஸ் மாடல் வெளிவந்தது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) உள்ளிட்ட பல வசதிகள் இ கேட் டஸ்டர் 8எக்ஸ் மாடலில் உள்ளன. மேலும் Chat GPT வாய்ஸ் சர்ச் ஆதரவும் இதில் உள்ளது.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், டூயல் பேண்ட் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. இதுதவிர 12W ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications








