Amazon ஸ்மார்ட் டிவி ஆஃப்பர்: சாம்சங், எல்ஜி, சியோமி டிவிக்கு ரூ.51901 வரை தள்ளுபடி!
அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியா விற்பனையை மிஸ் செய்த வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறப்புத் தள்ளுபடியை அமேசான் நிறுவனம் வழங்குகிறது. புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு ரூ.51,901 வரை தள்ளுபடி கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி தள்ளுபடி
அமேசான் நிறுவனத்தின் இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனையின் கீழ் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி தள்ளுபடியை அமேசான் வழங்கியுள்ளது. இந்த விற்பனையின் கீழ் சாம்சங், எல்ஜி, சியோமி மற்றும் பல நிறுவனங்களின் டிவிகளில் தள்ளுபடி விலையில் வழங்குகிறது. சிறந்த சலுகையுடன் கிடைக்கும் டிவி தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் 55' இன்ச் சாம்சங் சூப்பர் 6 சீரிஸ் 4K UHD டிவி
சாம்சங் நிறுவனத்தின் 55' இன்ச் சாம்சங் சூப்பர் 6 சீரிஸ் 4K UHD டிவி, இப்பொழுது ரூ.51,901 தள்ளுபடியுடன் வெறும் ரூ.52,999 என்ற விலையில் கிடைக்கிறது, இதன் அசல் விலை ரூ.1,04,900. சாம்சங்கின் டைசன் அடிப்படையிலான இயக்க முறைமையை மற்றும் முதன்மை OTT சேவைகளுக்கான ஆதரவோடு வருகிறது. இந்த டிவியில் 2-HDMI, 1-USB போர்ட், வைஃபை மற்றும் புளூடூத் ஆகிய சேவைகள் உள்ளது.

LG 43' இன்ச் முழு எச்டி எல்இடி டிவி 43LK5360PTA
எல்.ஜி நிறுவனத்தின் LG 43' இன்ச் முழு எச்டி எல்இடி டிவி 43LK5360PTA டிவி, ரூ.12,991 தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ.33,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதனை அசல் விலை ரூ.46,990 ஆகும். இந்த டிவி 50 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டிடிஎஸ் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

Onida 43' இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் ஐபிஎஸ் எல்இடி டிவி
ஒனிடா நிறுவனத்தின் இந்த புதிய Onida 43' இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் ஐபிஎஸ் எல்இடி டிவி, இப்பொழுது வெறும் ரூ.21,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.29,990 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவி ஃபயர் டிவி ஓஎஸ் இயங்கு முறையில் இயங்குகிறது. இந்த டிவியில் 3 எச்.டி.எம்.ஐ மற்றும் 1 யூ.எஸ்.பி போர்ட் இணைப்பு விருப்பங்களுடன் கிடைக்கிறது.

Mi எல்இடி டிவி 4X 50 இன்ச் 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவி
சியோமி நிறுவனத்தின் இந்த Mi எல்இடி டிவி 4X 50 இன்ச் 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவி, ரூ.5000 என்ற தள்ளுபடியுடன் வெறும் ரூ.29,999 என்ற விழியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.34,999 என்பது குறிப்பிடத்தக்கது. சியோமியின் இந்த Mi 4 கே யுஎச்.டி டிவி 4X ஆண்ட்ராய்டு டிவி இயக்க முறைமையில் இயக்குகிறது.


Click it and Unblock the Notifications