Alexa ஆதரவுடன் Amazon ஸ்மார்ட் பிளக் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

அமேசான் தனது ஸ்மார்ட் பிளக் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது அலெக்ஸாவுடன் இணைந்து செயல்படக் கூடிய ஸ்மார்ட் சாதனமாகும். இனி வெறும் வாய்ஸ் கண்ட்ரோலில் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரிக் சாதனங்களையும் நீங்கள் இப்பொழுது எளிதாக கட்டுப்படுத்தலாம். அமேசானின் இந்த ஸ்மார்ட் பிளக் பற்றிய முழு விபரத்தைப் பார்க்கலாம்.

ஒரு சவுண்ட் கொடுத்தால் போதும்

ஒரு சவுண்ட் கொடுத்தால் போதும்

வீட்டில் உள்ள எலக்ட்ரிக் விளக்குகள், டேபிள் ஃபேன், எலக்ட்ரிக் கெட்டில், ரூம் கூலர்கள், ஏசி, டிவி, மொபைல் சார்ஜர்கள், ஏர்-பியூரிஃபையர்கள், ஃபிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற எந்த எலக்ட்ரிக் சாதனமாக இருந்தாலும் நீங்கள் இதில் இணைத்து குரல் கட்டுப்பாட்டின் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம். இனி உங்கள் எலக்ட்ரிக் சாதனங்களை ஆப் மற்றும் ஆன் செய்ய ஒரு சவுண்ட் கொடுத்தால் போதும்.

Amazon ஸ்மார்ட் பிளக் விலை என்ன?

Amazon ஸ்மார்ட் பிளக் விலை என்ன?

தற்பொழுது அமேசான் தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட் பிளக் வெறும் ரூ. 1999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அமேசான் வலைத்தளம் மட்டுமின்றி மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள அமேசான் கியோஸ்க்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது. அமேசான் தனது புதிய ஸ்மார்ட் பிளக்கிற்கு சலுகையையும் வழங்கியுள்ளது.

Google எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!Google எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்!

ரூ.1000 சலுகையா?

ரூ.1000 சலுகையா?

அமேசான் எக்கோ டாட் சாதனத்துடன் வாடிக்கையாளர் இந்த ஸ்மார்ட் பிளக்கை சேர்த்து ஒரே பகுதியாக வாங்கும்போது அமேசான் ஸ்மார்ட் பிளக் வெறும் ரூ.999 என்ற விலையில் ரூ.1000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அமேசான் ஸ்மார்ட் பிளக் மூலம், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் பிளக்கை ஹேண்ட்ஸ் ஃப்ரீ குரல் கட்டுப்பாட்டுக்கு இணக்கமான அலெக்சா சாதனத்துடன் இணைப்பதன் மூலம் ஸ்மார்ட் கட்டுப்பாட்டைப் பெறலாம்.

எப்படி ஸ்மார்ட் பிளக்-ஐ பயன்படுத்துவது?

எப்படி ஸ்மார்ட் பிளக்-ஐ பயன்படுத்துவது?

அலெக்ஸா சாதனம் இல்லாதவர்கள் அலெக்ஸா பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களை அருகில் இல்லாதபோதும் கூட எளிதாகக் கட்டுப்படுத்தலாம். அமேசான் ஸ்மார்ட் பிளக்கை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது, உங்கள் வீட்டில் உள்ள மின் சாக்கெட்டில் செருகி, இணைக்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் எக்கோ, ஃபயர் டிவி அல்லது அலெக்சா உள்ளமைக்கப்பட்ட சாதனம் அல்லது அலெக்சா பயன்பாட்டின் வழி இயக்கலாம். இன்னும் இதில் பல கூடுதல் அம்சங்களும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Smart Plug with Alexa Support launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X