Home
Gadgets

ரூ.6,299-க்கு ஸ்மார்ட் டிவி.. 24-இன்ச் முதல் 55-இன்ச் வரை.. தூள் கிளப்பும் அமேசான்! வுட்றாதீங்க மக்களே..

இந்தியாவில் கம்மி விலையில் அசத்தலான அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வெஸ்டிங்ஹவுஸ் டிவிகளுக்கு சலுகைகள் கிடைத்துள்ளது.

அதாவது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Freedom Festival Sale)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தான் வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான வெஸ்டிங்ஹவுஸ் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

ரூ.6,299-க்கு ஸ்மார்ட் டிவி..தூள் கிளப்பும் அமேசான்! வுட்றாதீங்க..

வெஸ்டிங்ஹவுஸ் 24-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி (WH24PL01) முன்பு ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் அறிவித்த சலுகையின் மூலம் இந்த டிவியை ரூ.6,299-விலையில் வாங்க முடியும். மேலும் வெஸ்டிங்ஹவுஸ் 40-இன்ச் W2 சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி (WH40FX51) மாடலுக்கு தற்போது 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

அதேபோல் வெஸ்டிங்ஹவுஸ் 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி (WH32SP12) மாடலுக்கு தற்போது 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை தற்போது ரூ.9,499-விலையில் வாங்க முடியும். பின்பு வெஸ்டிங்ஹவுஸ் 43-இன்ச் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (WH43SP99) ) முன்பு ரூ.20,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு விற்பனையின் மூலம் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.16,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவிகளும் கம்மி விலையில் கிடைக்கின்றன. அதன்படி வெஸ்டிங்ஹவுஸ் 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (WH43UD10) ரூ19,499-விலையிலும், 50-இன்ச் வெஸ்டிங்ஹவுஸ் 4கே ஸ்மார்ட் டிவி (WH50UD82) ரூ.25,499-விலையிலும் வாங்க முடியும். இந்த 4கே ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் டிவிகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 50-இன்ச் வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் டிவிக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 50-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.26,999-விலையில் வாங்கக் கிடைக்கும். அதேபோல் இதன் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.28,499-க்கு வாங்கக் கிடைக்கிறது.

வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் அம்சங்கள்:குறிப்பாக இந்த வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் டிவிகளில் 4கே ஆதரவு, HDR 10 பிளஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. மேலும் பெசல்-லெஸ் மற்றும் ஏர்-ஸ்லிம் வடிவமைப்புடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். அதேபோல் மீடியாடெக் 9062 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளன குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள். எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரூ.6,299-க்கு ஸ்மார்ட் டிவி..தூள் கிளப்பும் அமேசான்! வுட்றாதீங்க..

2 x 48W டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளன இந்த வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். பின்பு புளூடூத் மற்றும் வைஃபை ஆதரவுகள் கொண்டுள்ளன இந்த டிவிகள். அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளன இந்த டிவிகள்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன இந்த வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் டிவிகள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். அதேபோல் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய உள்ளது வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale: Westinghouse Smart TVs available at discounted prices: check full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X