Home
Gadgets

தெறிக்கவிடும் அமேசான் ஆஃபர்.. ரூ.9,990 போதும்.. ரெட்மி டிவியை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அட்டகாசமான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் அமேசான் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தான் தற்போது அமேசான் தளத்தில் அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டிவிக்கு இப்போது 60 சதவீதம் தள்ளுபடி கிடைத்துள்ளது. எனவே ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.9,990 விலையில் வாங்க முடியும்.

 ரூ.9,990 போதும்.. ரெட்மி டிவியை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ரூ.750 வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு டிவி 11 இல் இயங்கும் பேட்ச்வால் 4-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஐஎம்டிபி ஒருங்கிணைப்பு மற்றும் யுனிவர்சல் சர்ச், கிட்ஸ் மோட் மற்றும் லாங்குவேஜ் யுனிவர்ஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு வருகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

அதேபோல் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியில் விவிட் பிக்சர் எஞ்சின் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும். மேலும் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த ரெட்மி டிவி வெளிவந்துள்ளது. சாம்சங், எல்ஜி நிறுவனங்களின் 32-இன்ச் டிவிகளை விட இந்த ரெட்மி டிவி தனித்துவமான ஆடியோ அம்சத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி ஆனது க்ரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதனுடன் க்யூக் மியூட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய Mi ரிமோட் வசதியும் உள்ளது. இந்த ரிமோட்டில் ஒரு குயிக் வேக் அம்சமும் அடங்கும். இது ஐந்து வினாடிகளுக்குள் டிவியை இயக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடலில் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0 ஆகியவை அடங்கும். மேலும் லேட்டஸ்ட் மிராக்காஸ்ட் ஆப், ஆட்டோ லோ லேடென்சி மோட் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில இடம்பெற்றுள்ளன. எனவே இந்த டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ரூ.9,990 போதும்.. ரெட்மி டிவியை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 2.0, ஏவி, 3.5mm ஹெட்ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக குயிக் வேக் ரிமோட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon sale: Redmi 32-inch Smart TV is available at 60 percent off: check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X