50-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய அமேசான்: உட்ராதீங்க மக்களே.!
Amazon தளத்தில் சிறப்பு Great Indian Festival எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த பல அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விற்பனை
அதாவது இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்களுக்கு தான் இருக்கும். எனவே கம்மி விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. சரி இப்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில்
கிடைக்கும் அட்டகாசமான ஸ்மர்ரட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி (L43M6-RA/L43M7-RA)
அமேசான் தளத்தில் 43-இன்ச் கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்
டிவியை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான்
கூறவேண்டும்.

43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், PatchWall 4 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

32-இன்ச் ஏசர் I Series HD Ready ஸ்மார்ட் டிவி
அமேசான் தளத்தில் தனித்துவமான அம்சங்கள் கொண்ட 32-இன்ச் ஏசர் I Series HD Ready ஸ்மார்ட் டிவிக்கு 45 சதவீதம் தள்ளுபடி
அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 1.5ஜிபி ரேம்,
8ஜிபி ஸ்டோரேஜ், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

43-இன்ச் ஒன்பிளஸ் Y Series Full HD ஸ்மார்ட் டிவி ( 43 Y1S)
முன்பு ரூ.31,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 43-இன்ச் ஒன்பிளஸ் Y Series Full HD ஸ்மார்ட் டிவி மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
அதேபோல் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஆர் 10 பிளஸ், எச்டிஆர்10, எச்எல்ஜி உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட்,64-பிட் பவர்ஃபுல் பிராசஸர் உள்ளிட்ட தரமான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி (UA32T4340BKXXL)
அமேசான் தளத்தில் சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி (UA32T4340BKXXL) மாடலுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.13,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த 32-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி ஆனது பர்சனல் கம்ப்யூட்டர், ஸ்கிரீன் ஷேர், மியூசிக் சிஸ்டம், கனெக்ட் ஷேர் மூவி போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாம்சசங் ஸ்மார்ட் டிவி மாடல்.

50-இன்ச் Kodak 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
முன்பு ரூ.46,499-க்கு விற்பனை செய்யப்பட்ட 50-இன்ச் Kodak 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை தற்போது ரூ.26,999-க்கு வாங்கமுடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 4கே டிஸ்பிளே, கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 2ஜிபி ரேம், டூயல் பேண்ட் வைஃபை
ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம்,யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








