Home
Gadgets

அண்ணாச்சி கடைல பிஸ்கட் வாங்கற மாதிரி இந்த 43-இன்ச் Redmi டிவியை வாங்க போறாங்க.. அமேசான் அதிரடி தள்ளுபடி.!

அமேசான் தளத்தில் அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப், இயர்பட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களை குறைந்த விலையில் கிடைக்கிறது.

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் பிரபலமான ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது ரெட்மி 43-இன்ச் ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி(L43M6-RA/L43M7-RA) மாடலுக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டிவிக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

43-இன்ச் Redmi ஸ்மார்ட் டிவியை வாங்க இதுதான் சரியான நேரம்.!

முன்பு இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த டிவியை ரூ.19,999-க்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதள சதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவுடன் இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவியில் நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

43-இன்ச் Redmi ஸ்மார்ட் டிவியை வாங்க இதுதான் சரியான நேரம்.!

டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் Vivid Picture Engine ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

புளூடூத் 5.0, வைஃபை, யுஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூட்யூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale: 43 percent off on 43-inch Redmi Smart TV announced: Here are the full details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X