Home
Gadgets

அதிரடி காட்டும் Amazon.. 24W ஸ்பீக்கர்கள், 8ஜிபி ஸ்டோரேஜ்.. சியோமி ஸ்மார்ட் டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் ஆனது இந்த மாதம் இறுதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை இந்த சிறப்பு விற்பனையில் வாங்குவது நல்லது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்த்த சியோமி 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது சியோமி நிறுவனத்தின் 32-இன்ச் எம்ஐ எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 5ஏ ப்ரோ மாடலுக்கு தான் தற்போது அமேசான் தளத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ.12,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

8ஜிபி ஸ்டோரேஜ்.. சியோமி ஸ்மார்ட் டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

சியோமி 5ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது 1366 x 768 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 178° வியூவிங் ஆங்கிள், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 85% NTSC கலர் கேமட், 92% DCI-P3 போன்றவைகளை கொண்ட 32-இன்ச் அளவிலான HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ள விவிட் பிக்சர் எஞ்சின் ஆனது ஒவ்வொரு காட்சிக்கும் கூடுதல் கலர், காண்ட்ராஸ்ட் மற்றும் டெப்த்-ஐ சேர்க்கிறது. அதேபோல் பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி 32-இன்ச் 5ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த டிவி மொத்தம் 24W ஆடியோ அவுட்புட்டை வழங்கும் டூயல்-ஸ்பீக்கர் சிஸ்டம் உடன் வருகிறது. மேலும் இது Dolby Audio, DTS:X மற்றும் DTS Virtual: X ஆகியவற்றிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. பின்பு குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது சியோமியின் 32-இன்ச் 5ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது இந்த பிராசஸர்.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது சியோமியின் 32-இன்ச் எம்ஐ எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 5ஏ ப்ரோ மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் சாப்ட்வேரை பொறுத்தவரை, இது Android 11 TV OS அடிப்படையிலான Xiaomi நிறுவனத்தின் சொந்த PatchWall UI உடன் வருகிறது, இது IMDb இன்டக்ரேஷன், யுனிவர்சல் சேர்ச், 300+ லைவ் சேனல்கள், 'பேரண்ட் லாக்' உடனான கிட்ஸ் மோட் மற்றும் 'யூசர் சென்டர்' போன்ற அம்சங்களைக் கொண்டு வருகிறது.

8ஜிபி ஸ்டோரேஜ்.. சியோமி ஸ்மார்ட் டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

இந்த ஸ்மார்ட் டிவியின் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை 2.4GHz / 5GHz வைஃபை 802.11 a/b/g/n/ac (2×2 MIMO) உள்ளது.மேலும் குரோம்காஸ்ட் பில்ட்-இன், கூகுள் ப்ளே ஸ்டோர், கூகுள் அசிஸ்டென்ட்,இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஈதர்நெட் போர்ட், ஒரு ஏவி மற்றும் ஒரு 3.5 மிமீ ஜாக் போன்றவைகளும் உள்ளன.

சியோமியின் 32-இன்ச் 5ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்நிறுவனம் கூடிய விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale: 32-inch Xiaomi Smart TV is available at 50 percent off: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X