அடிச்சான் பாரு Amazon.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. ரெட்மி 4K டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?
தற்போது நடைபெறும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட், டேப்லெட் மாடல்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சில நாட்கள் மட்டும் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சாதனங்கள் கம்மி விலையில் வாங்க முடியும்.
அதேபோல் அமேசான் தளத்தில் மிகவும் எதிர்பார்த்த ரெட்மி 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 (Redmi 4K Ultra HD Android Smart LED TV X43) மாடலுக்கு அமேசான் தளத்தில் 49 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.21,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்போது ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது இந்த ரெட்மி 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஆனது 3840 × 2160 பிக்சல்ஸ், 4கே எச்டிஆர் ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு, விவிட் பிக்சர் என்ஜின் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக 4கே டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
ரெட்மி 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஆனது பேட்ச்வால் 4 UI வசதியுடன் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
குவாட்-கோர் பிராசஸர் உடன் இந்த ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எகஸ்43 மாடல். எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி. பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode), மிராகாஸ்ட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளும் இந்த ரெட்மி டிவியில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர பல்வேறு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது.
டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி. அதாவது பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற ஆப்ஸ்களின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட்.


Click it and Unblock the Notifications








