Home
Gadgets

ரூ.28,499 விலை கொண்ட இந்த 43-இன்ச் டிவி இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? அதிரடி காட்டும் அமேசான்..

தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எனும் சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கம்மி விலையில் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிகளை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த அமேசான் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் கோடக் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கோடக் 43-இன்ச் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவிக்கு தான் தற்போது 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டிவி முன்பு ரூ.28,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த 43-இன்ச் டிவி இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? அமேசான் அதிரடி..

ஆனால் தற்போது வழங்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த கோடக் 43-இன்ச் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (Kodak 9XPRO Series Full HD Certified Android LED TV) மாடலை ரூ.15,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இப்போது இந்த கோடக் டிவியின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கோடக் 43-இன்ச் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆனது 1920 x 1080 பிக்சல் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கோடக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.

இந்த கோடக் 43-இன்ச் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலில் சூப்பர் காண்ட்ராஸ்ட், ஹை பிரைட்நஸ், எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடக் நிறுவனம். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த டிவி.

கோடக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, ஸ்க்ரீன் மிரரிங் உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த 43-இன்ச் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.

டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றம் டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த கோடக் 43-இன்ச் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். குறிப்பாக 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இருப்பதால் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் மிக அருமையாக பயன்படும்.

ரியல்டெக் ப்ராசஸர் அடிப்படையாக கொண்டு இந்த கோடக் 43-இன்ச் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி வெளிவந்துள்ளது. இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஆக்சிஜன் ப்ளே, ஈரோஸ் நவ், ஜியோசினிமா, சோனிலிவ், யூடியூப், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கோடக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. அதாவது நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற ஷார்ட் கட் கீ கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். இதுதவிர டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த 43-இன்ச் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale 2023: Kodak 43-inch Smart TV is available at 44 percent off: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X