இதைவிட கம்மி விலையில் 43-இன்ச் டிவி கிடைக்காது.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 1.5ஜிபி ரேம்.. அசத்தும் அமேசான்..
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மாரட் டிவிகள் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சற்று கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது 43-இன்ச் ஏசர் டிவி தற்போது அமேசானில் மிகவும் கம்மி விலையில் கிடைக்கிறது. ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கடந்த வாரம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று இதே ஏசர் 43-இன்ச் டிவி ரூ.18,999-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவியின் (Acer Advanced I Series Full HD Smart LED Google TV) அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவியில் மேம்பட்ட பல புதிய அம்சங்கள் கிடைக்கும்.
இந்த டிவியில் 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
சக்திவாய்ந்த குவாட் கோர்ட் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.
ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது . எனவே இந்த டிவி ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. அதாவது இந்த டிவியின் ரிமோட் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்றவற்றின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது. பின்பு ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
குறிப்பாக 43-இன்ச் டிவிகள் இதே தரமான அம்சங்களுடன் ரூ.25,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தரமான அம்சங்களுடன் இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








