அலெக்ஸா வசதியுள்ள ரோபோவை 2019க்குள் வெளியிட தீயாய் வேலை செய்யும் அமேசான்

|

2019ஆம் ஆண்டிற்குள் தனது வீட்டு ரோபோட்டை வெளியிட தீவிரமாக பணியாற்றிவருகிறது அமேசான் என்கிறது ப்ளூம்பெர்த் அறிக்கை. ரோமன் நம்பிக்கையின் படி வீடு மற்றும் குடும்பத்தின் கடவுளை குறிக்கும் வகையில் இந்த பாராஜெக்ட் வெஸ்டா எனவும் அழைக்கப்படுகிறது. 2018ன் இறுதியில் ரோபோட் பரிசோதனைகளை துவங்கி 2019ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அலெக்ஸா வசதியுள்ள ரோபோவை 2019க்குள் வெளியிட தீயாய் வேலை செய்யும் அமேசா

அமேசானின் ரோபாட்டிக்ஸ் பிரிவு தனது சேமிப்புகிடங்கில் தானாக வேலைசெய்யும் இயந்திரங்களை வடிவமைத்துள்ளது. ஆனால் இந்த புதிய ப்ராஜெக்ட் அமேசான் லேப்126 ன் தலைவர் கிரிக் ஜீர் தலைமையில் நடைபெறுகிறது. கலிபோர்னியாவில் இயங்கும் இந்த லேப்பில், எக்கோ மற்றும் பயர்லைன் பிராடெக்ட்களை தயாரித்த வன்பொருள் குழு உள்ளது.

வெஸ்டா என்பது, தானாக இயங்கும் செல்ப் டிரைவ் கார்களை போல ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தானாக நகரும் ஒரு மொபைல் எக்கோ கருவியாக இருக்கலாம். தனது பணியாளர்கள் வீடுகளில் இந்த ஆண்டு புதிய ரோபோட்டை பயன்படுத்துவார்கள் என நம்பிக்கையுடன் சொல்கிறது அமேசான் நிறுவனம்.

மேலும் கூறுகையில், கார்களில் வெர்சுவல் அசிஸ்டென்ட் பயன்படுத்தும் வகையில் எக்கோ கருவி மேம்படுத்தப்படுவதாக கூறியது. பிப்ரவரியில் இந்த கருவியின் பீட்டா வெர்சனை வெளியிட்ட பின்பு இந்தாண்டு இறுதியில் உலகம் முழுவதும் புதிய ஸ்பீக்கர்கள் வெளியாகும் என மேலும் கூறியது. அறிக்கயில் கூறப்பட்டுள்ள படி பார்த்தால் ஜூன் அல்லது ஜூலை 2018ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால் , அமேசான் நிறுவனம் கார் உற்பத்தியாளர்களுடன் இணைந்து அலெஸ்காவை பயன்படுத்தி கார் தகவல்தொடர்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. பிப்ரவரி 2017ல், ஃபோர்டு நிறுவனம் அலெஸ்கா வசதியுள்ள SYNC3 தகவல்தொடர்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. ஜகுவார், லேண்ட்ரோவர், நிசான் போன்ற கார்களில் ஆட்டோமோடிவ் செயலிகளை 2012ல் அறிமுகப்படுத்திய ஏ.ஜி.எல் உடன் இணைந்துள்ளது அமேசான்.

இது போன்ற கருவிகளை சந்தையில் அமேசான் அறிமுகப்படுத்தியவுடன், அனைத்து போட்டியாளர்களையும் அடித்து துவம்சம் செய்யும்.

மே 2-ல் மீண்டும் வெளியாகிறது நோக்கியா N9; இந்தியாவில் எப்போது.?மே 2-ல் மீண்டும் வெளியாகிறது நோக்கியா N9; இந்தியாவில் எப்போது.?

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon seems to be working on domestic robots that will be launched in 2019, reports Bloomberg. The project is dubbed as Vesta, after the goddess of home and family in Roman mythology. The company will most likely begin testing the robots by the end of 2018, while targeting a 2019 launch. Vesta could a mobile device that can move from one place to another on its own.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X