Home
Gadgets

Amazon Prime Day சேல்: ரூ.5.999 விலையில் டிவியை விற்பனை செய்யும் பிரபல நிறுவனம்.!

அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) எனும் சிறப்பு விற்பனை நாளை (ஜூலை 15) துவங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி, டேப்லெட், ஸ்மார்ட்போன், இயர்ட்பட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை இந்த சிறப்பு விற்பனை வாங்குவது மிகவும் நல்லது. அதாவது தள்ளுபடியில் அதிநவீன சாதனங்கள் கிடைக்கின்றன. எனவே இந்த சிறப்பு விற்பனை தவறவிடக்கூடாது. பின்பு இந்த சிறப்பு விற்பனையில் வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) நிறுவனத்தின் டிவிகளுக்கு நம்ப முடியாத தள்ளுபடியை அறிவித்துள்ளது அமேசான்.

Amazon சேல்: ரூ.5.999 விலையில் டிவியை விற்பனை செய்யும்  பிரபல நிறுவனம்

அதாவது இந்த சிறப்பு விற்பனையில் 24-இன்ச் கொண்ட வெஸ்டிங்ஹவுஸ் ( WH24PL01) டிவியை ரூ.5,999-விலையில் வாங்க முடியும். பின்பு 32-இன்ச் எச்டி ரெடி வெஸ்டிங்ஹவுஸ் (WH32PL09) டிவி ரூ.7,499-விலையில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகள் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 32-அன்ச் எச்டி ரெடி வெஸ்டிங்ஹவுஸ் (WH32SP12) ஸ்மார்ட் டிவி ரூ.9,499-க்கு வாங்க கிடைக்கும். பின்பு 40-இன்ச் ஃபுல் எச்டி (WH40SP50) ஸ்மார்ட் டிவி ரூ.13,499-விலையிலும், 43-இன்ச் ஃபுல் எச்டி (WH43SP99) ஸ்மார்ட் டிவி ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட வெஸ்டிங்ஹவுஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி தான் கம்மி விலையில் கிடைக்கிறது.

குறிப்பாக வெஸ்டிங்ஹவுஸ் 4கே ஸ்மார்ட் டிவிகளுக்கு கூட நம்பமுடியாத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது 43-இன்ச் அல்ட்ரா எச்டி (WH43UD10) ஸ்மார்ட் டிவி ரூ.19,999-விலையிலும், 50-இன்ச் அல்ட்ரா எச்டி (WH50UD82) ஸ்மார்ட் டிவி ரூ.25,999-விலையிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த இரண்டு டிவிகளும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன.

மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கு கூட இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி கிடைக்கும். அதாவது வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் ஆனது 32-இன்ச் எச்டி, 40-இன்ச் ஃபுல் எச்டி, 43-இன்ச் ஃபுல் எச்டி என்கிற மூன்று அளவுகளில் கிடைக்கும். தற்போது இதன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Amazon சேல்: ரூ.5.999 விலையில் டிவியை விற்பனை செய்யும்  பிரபல நிறுவனம்

எனவே புதிய வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் ஆனது 32-இன்ச் எச்டி டிவி மாடலை ரூ.10,399-விலையில் வாங்க முடியும். வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகளுக்கு கூட தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள் ஆனது 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.26,499-விலையில் வாங்க முடியும்.

இதுதவிர வெஸ்டிங்ஹவுஸ் 4K குவாண்டம் சீரிஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.30,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக வெஸ்டிங்ஹவுஸ் 4Kகுவாண்டம் சீரிஸ் டிவிகளில் 4கே ஆதரவு, HDR 10 பிளஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. மேலும் பெசல்-லெஸ் மற்றும் ஏர்-ஸ்லிம் வடிவமைப்புடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. அதேபோல் மீடியாடெக் 9062 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளன குவாண்டம் சீரிஸ் கூகுள் டிவிகள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale: Westinghouse's 24-inch to 55-inch TVs Get Discounts : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X