அமேசான் பிரைம் தின விற்பனை- குறைந்த விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட் டிவிகள்.!

|

அமேசான் பிரைம் தின 2020 விற்பனை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ஸ்மாரட்போன்கள், டிவிக்கள், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.  மே

பிரைம் தின விற்பனை கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இந்த அமேசான் பிரைம் தின விற்பனையானது வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. எச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீத கூடுதல் தள்ளுபடியை பெறலாம். மேலும் இந்த விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

டிசிஎல் டிவி

டிசிஎல் டிவி

டிசிஎல் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் சற்று உயர்ந்த விலையில் தான் வரும். ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அமேசான் பிரைம் தின விற்பனையில் 32-இன்ச் டிசிஎல் டிவி மாடல் ஆனது ரூ.15,499-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் 720பிக்சல் டிஸ்பிளே, 2எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், எச்டிஆர் 10, க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

நான்கு கேமராக்களுடன் அறிமுகமாகும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்.!

ஹைசென்ஸ்  டிவி

ஹைசென்ஸ் டிவி

ஹைசென்ஸ் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்டிவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெச்டி, முழுஹெச்டி மற்றும் 4கே அல்ட்ரா ஹெச்டி போன்ற அம்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹைசென்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் 1366 x 768 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. இது க்வாட் கோர் சிபியு பவர் 470 எம்பி ஜிபியூ பவருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அதுமட்டுமின்றி டோல்பை ஆடியா டிடிஎஸ் சவுண்ட் அம்சங்களோடு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது. இந்த ஹைசென்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி மாடலை ரூ.11,990-விலையில் வாங்க முடியும்.

ஷின்கோ டிவி

ஷின்கோ டிவி

ஷின்கோ ஸ்மார்ட் டிவிகளுக்கு அமேசான் பிரைம் தின விற்பனையில் அட்டகாச தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்மையில் அறிமுகம் செய்யபப்பட்ட 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல் திர்மானம், எச்ஆர்டிபி தொழில்நுட்ப ஆதரவு, குவாட்-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் உடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும 20வாட் ஆடியோ ஆதரவும் இவற்றுள் அடக்கம். ஜீ5, சோனி லிவ் மற்றும் பல பயன்பாடுகளுடன் இந்த சாதனம் வெளிவருகிறது.

 ஒனிடா டிவி

ஒனிடா டிவி

அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட 32-இன்ச் ஒனிடா டிவி ஆனது 12,000-விலையில் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஒனிடா ஸ்மார்ட் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ 5 மற்றும் சோனிலிவ் போன்ற ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கோடக் டிவி

கோடக் டிவி

இந்த சிறப்பு விற்பனையில் 32-இன்ச் கோடக் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி, கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் க்ரோம்காஸ்ட் ஆதரவு,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale: Made in India 32-inch smart TVs under ₹15000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X