Amazon Prime Day 2021: ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
அமேசான் தளத்தில் Amazon Prime Day 2021 எனும் தலைப்பில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் சலுகைகள் உள்ளது. இப்போது அமேசான் தளத்தில் விலைகுறைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி 43-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
அமேசான் சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் 43-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.29,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.28,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆதரவுடன் 20W ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.
டிசிஎல் 40-இன்ச் FHD LED ஸ்மார்ட் டிவி
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிசிஎல் 40-இன்ச் FHD LED ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.39,990-ஆக உள்ளது. ஆனால் சிறப்பு விற்பனையில் ரூ.19,990-விலையில் வாங்க முடியும்.
ஒன்பிளஸ் 43-இன்ச் Y series டிவி
ஒன்பிளஸ் 43-இன்ச் Y series டிவியின் உண்மை விலை ரூ.29,999-ஆக உள்ளது. ஆனால் அமேசானின் சிறப்பு விற்பனையில் ரூ.27,999-விலையில் வாங்க முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குளம் மற்றும் தனித்துவமான மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம்.
சாம்சங் Wondertainment Series ஸ்மார்ட் டிவி
சாம்சங் Wondertainment Series ஸ்மார்ட் டிவி டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவுடன் 20W ஸ்பீக்கர்கள் கொண்டு வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.38,900-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனை மூலம் ரூ.31,990-க்கு வாங்க முடியும்.
மி 4ஏ ப்ரோ எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி
32-இன்ச் கொண்ட மி 4ஏ ப்ரோ எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.15,999-விலையில்
வாங்க முடியும்.
ஒன்பிளஸ்32Y1 ஸ்மார்ட் டிவி
ஒன்பிளஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி ஆனது HD ரெடி பேனல், 20W ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளம், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.17,999-ஆக உள்ளது.
அமேசான் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் 40-இன்ச் மி 4ஏ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை ரூ.23,999-விலையிலும், எல்ஜி 32-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவியை ரூ.16,999-விலையிலும் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications