43-இன்ச் Mi ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்க ஆசையா? அப்போ இந்த Amazon ஆஃபரை மிஸ்பண்ணாதீங்க..
தற்போது அமேசான் வலைத்தளத்தில் அமேசான் பிரீமியம் டிவி டே சேல் (Amazon Premium TV Days Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது ஜூலை 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் டிவி கம்மி விலையில் கிடைக்கிறது.
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் சியோமியின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது சியோமி நிறுவனத்தின் எம்ஐ 43-இன்ச் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ(Mi 43 Inches Full HD Android Smart LED TV 4A)ஸ்மார்ட் டிவிக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

முன்பு இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசானில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த டிவியை ரூ.20,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.
இந்த எம்ஐ 43-இன்ச் 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஐ 43-இன்ச் 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவியில் ஏைஎனை பிக்சர் என்ஜின் ஆதரவு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் 64-பிட் ப்ராசஸர் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் சியோமி டிவி ஆனது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எம்ஐ 43-இன்ச் 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. பின்பு இந்த டிவியில் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் PatchWall (பேட்ச்வால்) ஆதரவைக் கொண்டு இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், கூகுள் ப்ளே மியூசிக், சோனி லிவ், ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற அனைத்து ஆப்ஸ்களையும் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் டேட்டா சேவர் (data saver) ஆதரைவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு இந்த ஸ்மார்ட் 43-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications








