இந்த விஷயம் தெரிஞ்சா சொல்லாம கொள்ளாம 43-இன்ச் டிவி வாங்குவீங்க: அதிரடி காட்டிய Amazon.!
அமேசான் தளத்தில் தொடர்ந்து ஸ்மார்ட் டிவி மற்றும் போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக அமேசான் தளத்தில் சில முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தற்போது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அதுவும் இந்தியாவில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இப்போது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 43-இன்ச் டிவிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிகளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Toshiba 43-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43V35KP)
முன்பு ரூ.34,990-க்கு விற்பனை செய்யப்பட்ட Toshiba 43-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43V35KP) மாடலை அமேசான் தளத்தில் தற்போது ரூ.21,990-க்கு வாங்க முடியும். அதாவது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த Toshiba 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.

Vu 43-இன்ச் Premium Series ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி (43GA)
அமேசான் தளத்தில் Vu 43-இன்ச் Premium Series ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி (43GA) மாடலுக்கு 49 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.35,000-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.17,999-க்கு வாங்க கிடைக்கிறது.
டுiரெஒ ஸ்மார்ட் ஓஎஸ், டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்ள், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போரட்,கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (எக்ஸ்43)
ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (எக்ஸ்43) மாடலுக்கு அமேசான் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.25,999-விலையில் வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்திஇந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும் போது ரூ.1500 தள்ளுபடி கிடைக்கிறது.
2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், குவாட் -கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம், எச்டிஆர் 10, எச்எல்ஜி, 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட் டிவி.

Hisense 43-inch 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ((43A6GE)
அமேசான் தளத்தில் Hisense 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43A6GE) மாடலுக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.44,990-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.20,990-க்கு வாங்கக் கிடைக்கிறது.
24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், எச்டிஆர் 10 ஆதரவு, 5ஜி வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

ஏசர் 43-இன்ச் ஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
முன்பு ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட்ட ஏசர் 43-இன்ச் ஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை அமேசான் தளத்தில் ரூ.23,999-க்கு வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவிக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் டூயல் பேண்ட் வைஃபை, 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், 64-பிட் குவாட்-கோர் பிராசஸர், டால்பி ஆடியோ ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (L43M7-EAIN)
அமேசான் தளத்தில் எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (L43M7-EAIN) மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.23,999-க்கு வாங்க முடியும்.
1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், பெசல்-லெஸ் டிசைன், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications