அமேசான் மிரளுது.. ரூ.16,990 பட்ஜெட்ல 40 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. கூகுள் TV OS.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடக்கும் மெகா சேவிங் டேஸ் 2025 (Mega Saving Days 2025) விற்பனையில் 40 இன்ச் டிசிஎல் கியூஎல்இடி டிவி (40 inch TCL QLED TV) மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், குவாட் கோர் சிப்செட், 8 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த 40 இன்ச் டிசிஎல் கியூஎல்இடி டிவியின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் மெகா சேவிங் டேஸ் 2025 விற்பனையில் பல்வேறு டிவி மாடல்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 53 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.16,990 பட்ஜட்டில் 40 இன்ச் டிசிஎல் கியூஎல்இடி டிவி கிடைக்கிறது. இதுபோக குறிப்பிட்ட கார்டுகளுக்கு உடனடி தள்ளுபடி மற்றும் ஈஎம்ஐ சலுகைகளும் கிடைக்கின்றன. இப்போது பீச்சர்களை பார்க்கலாம்.

40 இன்ச் டிசிஎல் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (40 inch TCL QLED TV Specifications): இதுவொரு V5C Series மாடலாகும். 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) கிடைக்கிறது. மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் (Metallic Bezel-Less Design) வருகிறது.
மேலும், மைக்ரோ டிம்மிங் (Micro Dimming), 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றம் 100 சதவீத கலர் வால்யூம் பிளஸ் (Color Volume Plus) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, கம்மியான பட்ஜெட்டிலும் பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்க முடிகிறது. இந்த 40 இன்ச் டிசிஎல் கியூஎல்இடி டிவியில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 24W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.
அதேபோல 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோர்ஜ் கிடைக்கிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஓகே கூகுள் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டுடன் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. 64 பிட் குவாட் கோர் (Quad Core) சிப்செட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால் இன்-பில்ட் ஓடிடிகள் இருக்கின்றன.
ஆகவே, பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) போன்ற ஓடிடி ஆப்கள் மற்றும் வெப் பிரவுசர் (Web Browser) கிடைக்கிறது. அதேபோல குரோம் காஸ்ட் (Cromecast), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கிடைக்கிறது. யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஹெட்போன் ஜாக், ஏவி கேபிள் சப்போர்ட் கிடைக்கின்றன.

வை-பை, ப்ளூடூத் போன்ற பீச்சர்களும் இருக்கின்றன. 1 வருட வாரண்டியுடன் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதைவிட கம்மியான விலைக்கு டிவி வேண்டுமானால், 32 இன்ச் எல்ஜி டிவி மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். இதற்கும் அமேசான் மெகா சேவிங் டேஸ் 2025 விற்பனையின் கீழ் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதன் விவரங்களை பார்க்கலாம்.
32 இன்ச் எல்ஜி வெப்ஓஎஸ் எல்இடி விலை (32 inch LG webOS LED TV Price): இந்த எல்ஜி டிவியானது 32 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.14,490 பட்ஜெட்டில் கிடைக்கிறது. LR570 மாடலாகும். 32 இன்ச் எச்டிரெடி டிஸ்பிளே, வெப்ஓஎஸ் மற்றும் ஏ5 ஜென் 6 சிப்செட் உள்ளது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி ரோம் வருகிறது. 10W ஆடியோ, விர்ச்சுவல் சரவுண்ட் 5.1 சப்போர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








